27 பேருடன் சீனா புறப்பட்டார் ஜனாதிபதி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூன்று நாள்கள் உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று காலை சீனாவுக்கு புறப்பட்டுள்ளார்.

அவருடன் 27 பேர் கொண்ட குழுவினர் பயணித்துள்ளனர்.

பீஜிங்கில் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிரிய நாகரீகங்களின் உரையாடல் மாநாடு என்ற கருத்தரங்கில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி சீனாவுக்குச் சென்றுள்ளார்.

இன்று காலை 7.35 மணி அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து யூ.எல். 302 என்ற ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் ஜனாதிபதி சீனாவுக்கு பயணமாகியுள்ளார்.

You might also like