5 ஆயி­ரம் பேர் சுட்­டுக் கொலை!!

பிலிப்­பைன்­ஸில் போதைப் பொரு­ளுக்கு எதி­ராக அந்த நாட்டு அதி­பர் ரோட்­ரிகோ டுடார்தோ மேற்­கொண்டு வரு­கின்ற மனி­தா­பி­மா­ன­மற்ற நட­வ­டிக்­கை­க­ளின் மூலம் இது­வரை 5ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மா­ன­வர்­கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

பிலிப்­பைன்ஸ் அதி­பர் போதைப்­பொ­ருள் கடத்­த­லுக்கு எதி­ரா­கக் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றார். போதைப்­பொ­ருள் கடத்­த­லில் ஈடு­ப­டும் குற்­ற­வா­ளி­க­ளைக் கண்­ட­வு­டன் சுட்­டுக் கொல்­வ­தற்கு உத்­த­ர­விட்­டுள்­ளார். கடந்த இரண்டு வரு­டங்­க­ளில் மட்­டும் 5ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர். பலர் காணா­மல்­போய் உள்­ள­னர்.

கடந்த சில மாதங்­க­ளில் இந்த எண்­ணிகை அதி­க­ரித்­துள்­ளது. 17 வயது மதிக்­கத்­தக்க சிறு­வன் ஒரு­வன் போதைப்­பொ­ருள் கடத்­தி­ய­தா­கப் பொலிஸ் அதி­கா­ரி­க­ளால் சுட்­டுக் கொல்­லப்­பட்­டான்.

இந்த விவ­கா­ரம் பெரி­து­ப­டுத்­தப்­பட்­ட­தும், சம்­பந்­தப்­பட்ட பொலி­சார் மீது வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. கடந்த சில வரு­டங்­க­ளா­கப் போதைப்­பொ­ருள் கடத்­த­லைச் சுட்­டிக்­காட்டி பிலிப்­பைன்ஸ் அரசு சுட்­டுக் கொன்ற சம்­ப­வங்­க­ளில் இந்த ஒரு வழக்கு மட்­டுமே நீதி­மன்­றத்­தால் ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது.

டுடர்தோ பிலிப்­பைன்­ஸின் அதி­ப­ராக 2016ஆம் ஆண்டு முதல் இருந்து வரு­கி­றார். இவ­ரு­டைய இந்­தச் செய­லுக்­குப் பல்­வேறு மனித உரிமை அமைப்­பு­க­ளும், அமெ­ரிக்கா உள்­ளிட்ட உலக நாடு­க­ளும் தங்­க­ளது எதிர்ப்­பைத் தெரி­வித்­துள்­ளன.

இருப்­பி­னும் அதற்­கெல்­லாம் சற்­றும் செவி சாய்க்­கா­மல் குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ரான மிகக் கடு­மை­யான தண்­ட­னை­களை அவர் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like