அசைவத்தை வெறுக்கும் கிராமம்!!

இந்தியா புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாடிமனைப்பட்டி கிராமம் “சைவ கிராமம்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

கிராமத்தில் உள்ள 45 குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக எவருத் அசைவ உணவுகளைச் சாப்பிடுவதில்லை.

கிராமத்தில் ஆடு கோழிகள் வளர்ப்பதில்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகின்றனர்.

வெளியூரில் இருந்து இந்தக் கிராமத்துக்கு திருமணம் செய்து வருபவர்களும் சைவத்தையே கடைப்பிடிப்பதாகக் கூறுகின்றனர்.

இதேபோல், இங்கிருந்து வெளியூர்களுக்குத் திருமணமாகிச் செல்லும் பெண்கள், மணமகன் வீட்டில் அசைவ உணவு சமைத்தாலும், தங்களுக்காகச் சைவ உணவு சமைத்து மட்டுமே சாப்பிடுவோம் என்று சத்தியம் செய்கின்றனர்.

கருத்து வேறுபாட்டால், சிறிய, சிறிய வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், அடிதடி வெட்டுக்குத்து சம்பவங்கள் ஏதும் இங்கு நடப்பதில்லை. வாத்தியங்கள் முழங்க ஆடம்பரமாக இங்குத் திருமணங்கள் நடைபெறுவதில்லை. திருமணங்களில் ஹோமங்கள், மந்திரங்கள் போன்ற சடங்குகளுக்கு இடமில்லை.

சன்மார்க்க முறைப்படி சன்மார்க்க தலைவர்கள் திருப்புகழ் பாடுகின்றனர். எளிய முறையில் திருமணங்கள் நடைபெறுவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like