அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க…!!

குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிரியம், ஆனால் அவர்களைச் சாப்பிட வைப்பது மிகவும் கடினமான ஒன்று.

குழந்தைகளுக்கு திகட்டாமல் இருப்பதற்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காமல், ஒரு குறிப்பிட்ட முறையான இடைவெளிகள் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் சாப்பிடும் போது அவசரப்படுத்தாமல், அவர்கள் சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்ககூடாது.

இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டவே கூடாது. மற்றவர்களோடு அமர்ந்து, குழந்தைகளை சாப்பிட விடவேண்டும்.

பழங்கள், காய்கறிகள், முழு பயறு வகைகள், பருப்பு வகைகள் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இவற்றை கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் இருக்கும்.

ஒரு நாளைக்கு ஒரு லீற்றர் தண்ணீராவது குழந்தைகளை குடிக்க வேண்டும் என்பதால், வெறும் தண்ணீராகக் குடிக்க அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் பழச்சாறாகவோ, பானமாகவோ கொடுக்க வேண்டும்.

வடிவங்களை மாற்றி குழந்தைகள் வியக்கும்படி உணவுகளைச் செய்து கொடுத்தால், மகிழ்ச்சியோடு குழந்தைகள் சாப்பிடுவார்கள்.

You might also like