அடுத்தடுத்து நகைச்சுவை படத்தில் யோகி பாபு!!

யோகி பாபு “பன்னிக்குட்டி” என்ற நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை அணுச்சரன் இயக்கியுள்ளார்.

கருணாகரன், யோகி பாபு கூட்டணியுடன், சிங்கம் புலி, ராமர், ‘பழைய‌ ஜோக்’ தங்கதுரை, திண்டுக்க‌ல் லியோனி, லட்சுமிப்பிரியா, கஜேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள‌னர்.

கிருஷ்ண குமார் இசையமைத்துள்ள பன்னிக்குட்டி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் அறிவித்துள்ளது.

யோகி பாபு மணமகன் கோலத்தில் குடும்பத்தார் மற்றும் ஒரு பன்னிக்குட்டியுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பத்து போன்ற காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

You might also like