அதிகம் கவனிக்கப்படாத ஆண்கள் தினம்!!

பன்­னாட்­டுப் பெண்­கள் தினம் பெற்­றுக்­கொள்­கின்ற கவ­ன­வீர்ப்­பைப் பன்­னாட்டு ஆண்­கள் தினம் பெற்­றுக்­கொள்­கின்­றதா? என்று கேள்வி எழுப்­பி­னால், ‘‘இல்லை’’ என்றே பதி­ல­ளிக்க வேண்­டி­வ­ரும். பல சந்­தர்ப்­பங்­க­ளில், ‘‘பன்­னாட்டு ஆண்­கள் தினம் என்று ஒன்று இருக்­கி­றதா?’’ என்று கேள்வி எழுப்­பு­வர்­க­ளும் நம்­மி­டையே உண்டு.

பன்­னாட்டு ஆண்­கள் தினம் நாளை திங்­கட்­கி­ழமை கொண்­டா­டப்­ப­ட­வி­ருக்­கி­றது. வருடா வரு­டம் நவம்­பர் மாதம் 19ஆம் திகதி, இந்­தத் தினம் கொண்­டா­டப்­ப­ட்டு வரு­கி­றது. நாளைய தினத்­துத் துக்கான இந்த வருடத் தொனிப்­பொ­ருள் நேர்­நிலை ஆண் முன்­னு­தா­ர­ணங்­கள் (‘ரோல் மொடல்’­கள்) பற்­றி­ய­தா­கும்.

நவம்­பர் மாதத்­தின் பிர­பல்­யம்
நவம்­பர் மாதம் பொது­வா­கப் பல்­வேறு முக்­கி­யத்­து­வங்­க­ளைக் கொண்­டி­ருக்­கி­றது. அதில் ஒன்று இந்த ஆண்­கள் பற்­றிய கரி­சனை அதி­கம் காட்­டப்­ப­டும் மாத­மாக இதைக் கொள்­ள­லாம். சவ­ரம் செய்­யாத அல்­லது சவ­ரம் தவிர்ப்பு மாத­மா­க­வும் இந்த மாதம் பிர­ப­லம் பெறு­கி­றது.
நவம்­பர் மாதம் 19ஆம் திகதி எவ்­வா­றான நிகழ்­வுத் தொடர்ச்­சி­கள் ஊடாக இந்த நிலையை அடைந்­தது என்­பது ஒரு­பு­றம் இருக்க, இந்தத் தினத்­தைக் கடைப்­பி­டிப்­ப­தன் மூலம் மன­தில் பதிய வேண்­டிய விட­ய­தா­னங்­கள் முக்­கி­ய­ மா­னவை.

ஆண் சமு­தா­யத்­துக்கு மதிப்­ப­ளிப்­ப­தற்­கா­க­வும் ஆண்­கள் தொடர்­பி­லான உரிமை மற்­றும் பாது­காப்­புப் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­துவ­தற்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள நாளில் அவர்­க­ளின் தியா­கங்­களை நினை­வூட்­டும் நாளா­க­வும் இந்த நாள் அமை­கி­றது.

போட்­டி­யா­கக்  கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்ற ஒன்­றல்ல
பன்­னாட்டு ஆண்­கள் தின­மென்­பது பன்­னாட்­டுப் பெண்­கள் தினத்­துக்­குப் போட்­டி­யா­கக் கொண்­டு­வ­ரப்­பட்ட ஒன்று போன்ற பிர­மையை ஏற்­ப­டுத்­தி­னா­லும், ஆண்­க­ளு­டைய வகி­பா­கத்­தின் மீது கவ­னப்­ப­டுத்­த­லைக் கொண்­டு­வ­ரும் நாளாக இந்த நாள் நினை­வு­கூ­ரப்­பட வேண்­டும். ஆண்­கள் மற்­றும் பையன்­க­ளின் ஆரோக்­கி­யம் தொடர்­பில் கவ­னம் செலுத்­து­தல், பாலின உற­வு­களை மேம்­ப­டுத்­து­தல், பால் சமத்­து­வத்தை மேம்­ப­டுத்­தல், ஆண் ‘ரோல் மொடல்’­க­ளைக் கௌர­வப்­ப­டுத்­தல் என்­பன இந்­தத் தினத்­துக்கு உரித்­தான குறிக் கோள்­க­ளா­கும்.

இவை தவிர, ஆண்­கள் மற்­றும் பையன்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெ­றும் பாலி­னப் பாகு­பாடு தொடர்­பில் கவ­னம் செலுத்­து­தல், ஆண்­கள் மற்­றும் பையன்­க­ளின் சமு­தா­யம், குடும்­பம், திரு­ம­ண­வாழ்க்கை மற்­றும் குழந்­தைப் பரா­ம­ரிப்புப் போன்ற விட­யங்­க­ளில் அவர்­க­ ளின் சாதனை மற்­றும் பங்­க­ளிப்­பு­கள் தொடர்­பில் மதிப்­ப­ளிக்­கும் தின­மா­க­வும் பன்­னாட்டு ஆண்­கள் தினம் விளங்­கு­ கின்­றது. ஆண்­க­ளி­டைய காணப்­ப­டுகின்ற, தவ­றான முடிவை எடுத்து உயிரை மாய்க்­கின்ற வீதம், பாட­சாலை மட்­டப் பெறு­பே­று­க­ளில் பையன்­கள் ஈட்­டும் குறைந்த பெறு­பேறு என்­ப­ன­வும் இத­னோடு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­பட வேண்­டிய விட­யங்­கள் என்­கி­றார் பிரிட்­ட­னின் பெண் தலைமை அமைச்­சர் தெரேசா மே.

ஆண் சமு­தா­யம்
எதிர்­நோக்­கும் சவால்­கள்
பன்­னாட்டு ஆண்­கள் தினத்­துக்­கான இணை­யத்­த­ளம் பின்­வ­ரும் விவ­கா­ரங்­களை ஆண்­கள் எதிர்­கொள்­ளும் சவால்­க­ளா­கப் பட்­டி­ய­லி­டு­கி­றது. பெண்­களை விட மூன்று மடங்குக்கு அதி­களவில் தவ­றான முடிவை எடுத்து உயிரை மாய்க்­கின்ற விவ­கா­ரத்­தாவ் பாதிக்­கப்­ப­டும் தரப்­பாக ஆண்­கள் விளங்­கு­கி­றார்
கள்.

மூன்று ஆண்­க­ளில் ஒரு­வர் உள்­நாட்டு வன்­முறை கார­ண­மா­கப் பாதிக்­கப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. ஒப்பீட்ட ளவில் பெண்­களை விட முன்­ன­தாகவே ஆண்­கள் சாவைத் தழு­வு­வ­தா­க­வும் இது சரா­ச­ரி­யாக 4 தொடக்­கம் 5 ஆண்­டு­கள் வித்­தி­யா­சம் உடை­ய­தா­கும்.

பின்­ன­டை­வான
மருத்­து­வ கார­ணி­கள்
ஆரோக்­கிய வாழ்வு சம்­பந்­த­மான கார­ணி­களை ஆரா­யு­மி­டத்து, ஆண்­கள் அவ­லப்­ப­டும் இடங்­கள் சில இயற்­கை­யாக அமைந்­தி­ருக்­கின்­றன. கார­ணம் பெண்­கள் இரண்டு ‘எக்ஸ்’ வகை நிற­மூர்த்­தங்­க­ளைக் கொண்­டி­ருக்க, ஆண்­கள் ஒரே ஓர் எக்ஸ் நிற­மூர்த்­தத்­தி­னையே கொண்­டி­ருக்­கின்­ற­னர். குறித்த ‘எக்ஸ்’ வகை நிற­மூர்த்­தத்­தில் கோளா­று­கள் எது­வும் இருக்­கு­மி­டத்­து­, அத­னால் ஏற்­ப­டும் பாதிப்­புக்­கள் பெண்­களை விட ஆண்­க­ளுக்கே அதி­கம் ஆகும். இதை­விட ‘எக்ஸ்’ பரம்­பரை அல­கு­க­ளில் ஏற்­ப­டும் விகா­ரங்­கள் கார­ண­மா­க­, உரு­வா­கும் ஆண் குழந்­தை­கள் முளைய நிலை­யில் அல்­லது பிறந்­த­வு­டன் இறக்­கும் பரி­தா­பங்­க­ளும் விஞ்­ஞான ரீதி­யில் விளக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

சில நோய்­கள், ஆண்­களை இலக்கு வைத்­துத் தாக்­கும் இயல்­பைக் கொண்­டி­ருக்­கின்­றன. புரஸ்­டேட் சுரப்­பியை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட நோய்­கள், வழுக்­கைத் தலை விவ­கா­ரம், ஆட்­டி­சம், ஹீமோ­பீ­லியா, நிறக்­கு­ருடு போன்­றவை அத்­த­கை­யவை ஆகும்.

சுவா­சப்­பைப் புற்­று­நோய் விட­யத்­தில் பெண்­களை விட ஆண்­கள் இரண்டு மடங்­கில் பாதிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் இரு­தய நோய்­க­ளும் ஆண்­க­ளையே அதி­கம் தாக்­கு­வ­தா­வும் சுட்­டிக் காட்­டப்­ப­டு­கி­றது.

இந்­தத் தினத்தை எப்­ப­டி
கொண்­டா­டு­வது?
ஆண்­களை நினைவு கூர்ந்து கொண்­டா­டும் இந்­தத் தினத்­தில் இத­னு­டன் தொடர்­பு­டை­ய­தான பொது நிகழ்­வு­களை ஒழுங்­கு­ப­டுத்­து­வது வர­வேற்­கப்­ப­டு­கி­றது. பொதுக்­கூட்­டங்­கள், கருத்­த­ரங்­கு­கள், நாடா­ளு­மன்ற உரை­கள், நிதி­சே­க­ரிப்பு நிகழ்­வு­கள், வானொலி தொலைக் காட்சி நிகழ்ச்­சி­கள் மற்­றும் அமை­தி­யான நடை­ப­வ­னி­கள் என்­ப­ன­வும் ஒழுங்­க­மைக்­கப்­ப­ட­லாம்.

சமூக ஊட­கங்­க­ளில் இது தொடர்­பான பதி­வு­களை இடு­வ­தும் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கி­றது. இந்­தத் தினத்தை ஒட்­டி­ய­தா­கக் காஷ்­ரக் (Hashtag) வகை­க­ளைப் பயன்­ப­டுத்தி முக­நூல் மற்­றும் இன்ஸ்­டா­கி­ராம் தளங்­க­ளில் செய்­தி­க­ளைப் பரப்­பு­வ­தும் பலரை இது தொடர்­பில் விழிப்­ப­டை­யச் செய்­யும்.

சக்தி இல்­லை­யேல் சிவன் இல்லை. சிவன் இல்­லை­யேல் சக்தி இல்லை என்­னும் ஆண்-­–பெண் பின்­னிப்­பி­ணைவை அடிப்­ப­டை­யா­கக் கொண்­ட­மைந்த நமது பாரம்­ப­ரி­யத்­தில் ஆண்­க­ளுக்­கான தினத்தை நினை­வு­கூர்­வ­தென்­பது மறை­மு­க­மாக ஆணா­திக்­கத்தை வலி­யு­றுத்­தும் விவ­கா­ர­மா­கவோ, பெண்­கள் விவ­கா­ரத்­தி­னைப் பின்­னுக்­குத் தள்­ளும் விதண்­டா­வா­த­மா­கவோ அர்த்­தம் கொள்­ளக்­கூ­டாது.

முன்னைய காலத்தில் ஆண்­கள் வகித்த வகி­பா­கங்­கள் பல இன்று பெண்­க­ளால் நிரப்­பப்­பட்டு முன்­கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன. இது ஒரு சமூக முன்­னேற்­ற­மா ­கக் கரு­தப்­பட்டு ஊக்­கு­விக்­க­வும் செய்­யப்­ப­டு­கி­றது. உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் பிர­தி­நி­தித்­து­ வத்­துக்­குப் பெண்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட முக்­கி­யத்­து­வம் இதற்­குச் சிறந்த உதா­ர­ண­மா­கக் காட்­டக்­கூ­டி­யது. ஆண்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­க­வென உரு­வாக்­கப்­பட்ட இந்­தத் தினத்­தில் நமது தந்தை, தன­யன், தம்பி, கண­வன் மற்­றும் மகன் உள்­ளிட்ட உற­வு­களை மன­தில் கொள்­ளு­வோம். பாலி­யல் சமத்­து­வத்தை வலி­யு­றுத்­தும் இந்­தக் காலத்­தில் அவர்­க­ளுக்­கான இந்­தத் தினம், கரி­ச­னை­யு­டன் கொண்­டா­டப்­ப­ட­வேண்­டி­ய­தன் முக்­கி­யத்­து­வம் உய்த்­து­ண­ரப்­பட வேண்­டும்.

You might also like