அதிகாலை எழுந்து கொள்ளுங்கள்- கிடைக்கும் அதிக பலன்கள்!!

அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் பல நன்மைகள் உண்டாகும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. எனவேதான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச்சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினர்.

நம் உடலில் ஒளிக் கதிர்கள் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன. மேலும் தேவர்களும், பித்ருக்களும் ஒன்றுகூடும் நேரம் இது. எனவே காலையில் அவர்களை நினைத்தால் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.

அதிகாலையில், பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கும் காரியங்கள், வெற்றியைத்தரும் என்பது, பழந்தமிழர் நம்பிக்கை.

உடலுக்கும் மனதுக்கும் சக்தி அளிக்கும். அதிகாலையில் நடப்பதும், ஓடுவதும், உடலின் ஆற்றலை சீராக்கி, புத்துணர்வூட்டும் செயல்களாகும். படிப்பது எளிதில் புரியும். நாள் முழுதும் புத்துணர்வாக இருக்கலாம்.

அதிகாலை எழுந்து படிப்பதனால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மாணவர்கள் மட்டுமல்ல வேலைக்கு செல்பவர்கள் கூட உங்கள் வேலையை அதிகாலை தொடங்கினால், உங்கள் வேலையில் நல்ல பலனைபெற முடியும்.

You might also like