அந்த ஜாம்பவானுக்கு- வயது 110!!

0 15

விளை­யாட்டு உல­கில், எம்­மைப் பிர­மிக்க வைப்­ப­வர்­கள் பலர். ‘‘எப்­படி இவ­ரால் முடி­கி­றது?’’ என்று மூக்­கில் விரல் வைத்து ஆச்­ச­ரி­யப்­ப­டு­ம­ள­விற்கு, விளை­யாட்டு உல­கில் பல ஜாம்­ப­வான்­கள் தோன்றி மறை­கி­றார்­கள். ரென்­னிஸ் உல­கில் இன்று எம்மை அசத்­திக் கொண்­டி­ருப்­ப­வர் சுவிற்­சர்­லாந் தின் றோஜர் பெட­ரர். வெற்­றிக்கு மேல் வெற்­றி­யா­கக் குவித்துச் சாதனை மேல் சாத­னை­கள் படைத்து, கோடி கோடி­யாய் பணம் சம்­பா­திக்­கும் இன்­னொரு றோஜர் பெட­ரர் இனிப் பிறக்­கப் போவ­தில்லை என்றே நினைக்­கத் தோன்­று­கின்­றது. 20 வரு­டங்­கள் கால்­பந்­தாட்ட உல­கில் கோலோச்­சிய பீலே என்று அழைக்­கப்­ப­டும் பிரே­சில் நாட்டு வீரர்­தான் கால்­பந்­தாட்ட உல­கின் மங்­காத நட­சத்­தி­ரம்.

ஒரு தடவை அமெ­ரிக்க அதி­பர் ரொனால்ட் றேகன் பீலேவை வெள்ளை மாளி­கை­யில் வர­வேற்­ற­போது, என் பெயர் றொனால்ட் றேகன். நான் அமெ­ரிக்க அதி­பர். உங்­க­ளைப் பற்­றிய அறி­மு­கம் எங்­க­ளுக்­குத் தேவை­யில்லை. முழு உல­க­மும் உங்­களை அறி­யும் என்று கூறி­யி­ருக்­கி­றார். மின்­னல் வேக ஓட்­டத்­தில், உசைன் போல்ட் உல­க­றிந்­த­வர். இப்­ப­டி­யாகப் பல்­வேறு விளை­யாட்­டுத் துறை­க­ளி­லும் சிலர் பதித்த முத்­தி­ரை­கள் கால­மெல்­லாம் நிலைக்­கும் என்­ப­தோடு, ஈடு­இ­ணை­யற்ற ஜாம்­ப­வான்­க­ளா­க­வும் மிளிர்­கி­ றார்­கள். மிளிர்ந்­தார்­கள்.

ஓட்­டம் எடுக்­கா­மல் ஆட்­டம் இழந்­தார்
இந்த வரி­சை­யில் வரும் கிரிக்­கெட் உல­கின் பிதா­ம­க­னான சேர் டொனால்ட் பிரட்­மான் இன்­னொரு ஜாம்­ப­வான். இவ­ரது 110ஆவது பிறந்த தின நிகழ்வை, கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி அன்று இவ­ரது படத்தை தனது பக்­கத்­தில் பதிப்பித்து, கூகுள் நினை­வு­கூர்ந்து கொண்­டாடி இருக்­கின்­றது. 52 டெஸ்ட் போட்­டி­க­ளில் விளை­யாடி, 6ஆயி­ரத்து 996 ஓட்­டங்­கள் குவித்து, 99.94 என்ற சரா­ச­ரியை நிலை­நாட்­டிச் சென்­றி­ருக்­கும் இந்த அதி­சய விளை­யாட்டு வீரர் ஓர் அசத்­த­லான வீரர் என்­ப­தில் என்ன சந்­தே­கம்? 29 சதங்­கள், 12 இரட்­டைச் சதங்­கள் அடித்து நொறுக்­கிய இவர் சரா­சரி 100இனை எட்­டிப் பிடிப்­ப­தில் ஒரு தடை ஏற்­பட்டு விட்­டது. தனது கடைசி இன்­னிங்­ஸில் 4 ஓட்­டங்­கள் எடுத்­தால், இந்­தச் சாத­னையை நிலை­நாட்­ட­லாம் என்ற நிலை இருந்­த­போது, இங்­கி­லாந்­தின் சுழல் பந்து வீச்­சா­ள­ரின் பந்­தில், ஓர் ஓட்­டம்­கூட எடுக்­கா­மல் ஆட்­ட­மி­ழந்­தார் பிரட்­மான். இந்­தச் சம்­ப­வம், 1948ஆம் ஆண்டு ஓவல் மைதா­னத்­தில் சம்­ப­வித்­துள்­ளது.

29 சதங்­களை அடித்து, மிக அதிக ஓட்­டங்­க­ளாக 334 ஒட்­டங்­களைத் தனி­ய­னாக ஆடி­யெ­டுத்த இவரை எப்­ப­டித்­தான் புகழ்­வது? இவ­ருக்கு அடுத்­த­தாகக் கிரிக்­கெட் உல­கின் ஜாம்­ப­வான் என்று வர்­ணிக்­கப்­ப­டும், சச்­சின், இந்­தத் தரு­ணத்­தில் தனது பிரட்­ம­னு­ட­னான சந்­திப்பை நினை­வு­கூர்ந்து அஞ்­சலி செலுத்­தி­யுள்­ளார்.

20ஆம் நூற்­றாண்­டின் சிறந்த வீரர்
உல­கம் வியக்­கும் இந்­தக் கிரிக்­கெட் வீரர் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் நியூ­ச­வுத் வேல்ஸ் என்­னும் இடத்­தில் ஓகஸ்ட் 27, 1908ஆம் ஆண்­டில் பிறந்­தார். தனது 19ஆவது வய­தில் அதா­வது 1927 ஆம் ஆண்டு முதல்­தர போட்டி ஒன்­றில் கலந்து கொள்­ளும் வாய்ப்பு இவ­ருக்­குக் கிடைத்­தது. அடி­லைட்­டின் மைதா­ன­மொன்­றில் விளை­யா­டிய இந்த மோத­லில் செஞ்­சரி அடித்து (118 ஒட்­டங்­கள்) தன்னை அறி­மு­கப்­ப­டுத்­திக் கொண்­ட­வர் இந்­தத் தீரர்! இவ­ரி­டம் இருந்த திறமை எந்த அள­வுக்கு உச்­சத்­தில் இருந்­துள்­ளது என்­பதை, தான் விளை­யா­டும் மூன்று இன்­னிங்ஸ்­க­ளில் ஒன்­றி­லா­வது அடிக்­கும் சதம் மூலம் வெளிப்­ப­டுத்­திக் கொண்­டார் இந்த வீரர். இவர் விளை­யா­டிய 21 வருட காலத்­தில் இந்­தக் கோலம் தொடர்ந்­தி­ருக்­கின்­றது. கிரிக்­கெட் சாத­னை­யா­ளர்­க­ளைப் பட்­டி­ய­லி­டும் ‘விஸ்­டன் அல்­மெ­னெக்’ 20ஆம் நூற்­றாண்­டின் அதி சிறந்த வீர­ராக, நூற்­றில் ஒரு­வ­ராக டொன் பிரட்­ம­னைத் தெரிவு செய்­தி­ருந்­தது.
கிரிக்­கெட் விளை­யா­டு­வ­தில் தன் ஓய்வை அறி­வித்த இவர், ஒரே­ய­டி­யாக ஓய்ந்து விட­வில்லை. ஒரு நிர்­வா­கி­யா­கப் பணி­யாற்­றி­ய­தோடு, நேர்­முக வர்­ண­னை­யா­ள­ரா­க­வும் இவர் தொழி­லாற்றி உள்­ளார். 1949ஆம் ஆண்­டில் ஆஸ்­தி­ரே­லிய அரசு இவ­ருக்கு ‘நைற்’ பட்­டம் கொடுத்து மதிப்­பு­றுத்த, டொன் பிரட்­மன் செர் டொன் பிரட்­ம­னாக உயர்ந்­தார்.

பந்­து­வீச்­சா­ளர்­க­ளுக்கு
தலை­வலி
இன்று விராட் கோக்லி. இங்­கி­லாந்து அணிக்கு அவரை ஆட்­ட­மி­ழக்­கச் செய்­வது என்­பது தலை­வே­த­னை­யாக இருப்­பது போல, தனது கால­கட்­டத்­தில் இங்­கி­லாந்­துக்­குத் தலை­வலி கொடுத்­த­வர் அசத்­தல் ஆட்­டக்­கா­ர­ரான பிரட்­மன். இவர்­க­ளது டெஸ்ட் தொடர்­க­ளில் மொத்­தம் 19 சதங்­களை இவர் விளா­சி­யி­ருக்­கி­ றார். ஏனைய துடுப்­பாட்ட வீரர்­கள விட இங்­கி­லாந்­துக்கு எதி­ராக 7 மேல­திக நூறு­கள் எடுத்­த­வர் இன்­று­வ­ரை­யில் இவர் ஒரு­வ­ரே­தான்! 1930ஆம் ஆண்­டில் இடம்­பெற்ற இங்­கி­லாந்து -– ஆஸ்­தி­ரே­லியா டெஸ்ட் தொட­ரில் 974 ஓட்­டங்­கள் ஆடிக் குவித்த சாத­னை­யா­ளர் இவர். இந்­தத் தொட­ரில்­தான் ஹெடிங்லி iதானத்­தில் மறக்க முடி­யாத 309 ஓட்­டங்­கள் ஆடி­யெ­டு­த்தார். இந்­தத் தொட­ரில் சரா­ச­ரி­யாக 139.14 ஓட்­டங்­கள் எடுத்து, 4 செஞ்­ச­ரி­களை அடித்­துத் தள்­ளிய இவர் பந்­து­வீச்­சா­ளர்­க­ளுக்குச் சிம்ம சொப்­ப­ன­மா­கத் திகழ்ந்­தி­ருக்­கி­றார்.

மலை­போல் குவித்த ஓட்­டங்­கள்
234 முதல் தர போட்­டி­க­ளி­லும் 334 இன்­னிங்ஸ்­க­ளி­லும் இவர் அடித்த ஓட்­டங்­கள் 28 ஆயி­ரத்து 67. இதில் ஆட்­ட­மி­ழக்­கா­மல் எடுத்த 452 ஓட்­டங்­கள் உள்­ள­டக்­கம். எல்லாமாக 117 நூறு­கள். 69 அரைச் சதங்­கள், முச்­ச­தங்­கள் அடித்­த­வர்­கள் என்ற பெருமை மேற்­கிந்­திய அணி­யி­ன­ரின் லாராவை விட இவ­ரி­டமே இருக்­கின்­றது. தனது எதி­ர­ணிக்கு எதி­ராக 5 ஆயி­ரம் ஓட்­டங்­க­ளுக்கு மேல் ஆடிக் குவித்த ஒரே­யொரு துடுப்­பாட்ட வீரர் சேர் டொனால்ட் பிராட்­ம­னே­தான். இங்­கி­லாந்­துக்கு எதி­ரான தொடர்­க­ளில் இவர் எடுத்த ஓட்­டங்­கள் 5 ஆயிரத்து 28!.

90ஆவது பிறந்த நாளும் அழைப்­பும்
இன்­னொரு ‘ஓட்ட இயந்­தி­ர­மான’ சச்­சின் ரென்­டுல்­கரை, தனது 90ஆவது பிறந்த தின­மன்று, பிரட்­மன், வீட்­டுக்கு விருந்­தி­ன­ ராக அழைப்பு விடுத்­தி­ ருந்­தார். அடி­லைட் நக­ரி­லுள்ள கெனி­ஸிங்­டன் பூங்­கா­வி­லுள்ள அவ­ரது இல்­லத்­தில் நேரில் சந்­தித்து வாழ்த்­துக் கூறி­ய­வர் சச்­சின். இந்த வாய்ப்பு எளி­தில் எல்­லோ­ருக்­கும் கிடைத்து விடு­வ­தில்லை. ஓகஸ்ட் 27ஆம் திகதி 1998ஆம் ஆண்டு இவ­ரைச் சந்­தித்­தது, மன­தில் ஒரு நீங்கா நினை­வாக இருக்­கின்­றது என்று அந்த நிகழ்வை நினைத்து, இன்று மனம் பூரிக்­கி­றார் சச்­சின் ரென்­டுல்­கர்.

இந்­தச் சந்­திப்­பின்­போது, ‘‘பெரிய ஆட்­டங்­க­ளில் விளை­யாட முன்பு உங்­களை எப்­ப­டித் தயார்­ப­டுத்­திக் கொள்­கி­றீர்­கள்?’’ என்று ரென்­டுல்­கார் பிரட்­மனை ஆர்­வத்­து­டன் கேட்­டுள்­ளார். அந்த இர­க­சி­யத்­தை­யும் பிரட்­மன் அவ­ரி­டம் சொல்­லத் தவ­ற­வில்லை. ‘‘பல மணி நேரம் எனது சொந்த வேலை­யில் நான் என்னை ஈடு­ப­டுத்­திக் கொள்­வேன்’’ அதுதான் அவர் வெளிப்­ப­டுத்­திய இர­க­சி­யம். அதா­வது துடுப்­பெ­டுத் தா­டு­வது பற்றி மனதை அலட்­டிக் கொள்­ளா­மல், நிதா­ன­மா­கக் களத்­தில் இறங்­கு­வேன் என்ற இர­க­சி­யத்­தையே அவர் சொல்லி இருக்­கி­றார்.

இன்­றைய கால­கட்­டத்­தில் விராட் கோக்லி தன்னை அசத்­த­லா­ன­ஒரு வீரரென நிரூ­பித்­துக்­கொண்டு இருக்­கி­றார். இங்­கி­லாந்து அணிக்கு இன்­றைய பெரிய தலை­வலி இவர்­தான். களத்­தில் இறங்­கும் இவரை எப்­படி வெளி­யேற்­று­வது? என்­பது அவர்­க­ளுக்கு பெருங் குழப்­ப­மாக இருக்­கின்­றது. அன்­றைய பிரட்­மன் போலவே இவ­ரும் இங்­கி­லாந்­தின் தலை­வ­லி­யாக மாறி­யி­ருக்­கின்­றார். அசத்­த­லான வீரர்கள் இருக்­கும் வரை, பார்­வை­யா­ளர்­க­ளான எமக்­கும் கொண்­டாட்­டந்­தான்.

You might also like