அனை­வ­ரும் ஒத்­து­ழைத்­தால் – மன்­னார் ‘டுபாய்’ நாடா­க மாறும்- வடக்கு ஆளு­நர்!!

0 697

சகல வளங்­க­ளு­முள்ள கவ­னிக்­கப்­ப­டாத மாவட்­டமே மன்­னார்! அனைத்­துத் தரப்­பி­ன­ரதும் ஒத்­து­ழைப்பு இருக்­கு­மா­னால் மன்­னார் மாவட்­டம் அடுத்த ‘டுபாய் நாடு’ போன்று மாறக்­கூ­டிய வல்­லமை உள்­ளது.

இவ்­வாறு வடக்கு மாகாண ஆளு­நர் சுரேன் ராக­வன் தெரி­வித்­தார்.
மன்­னார் மாவட்­டச் செய­லக கேட்­போர் கூடத்­தில்  மாவட்­டச் செய­லர் சி.ஏ.மோக ன் றாஸ் தலை­மை­யில் நேற்­று­முற்­ப­கல் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது.
மன்­னார் மாவட்­டத்­தி­லுள்ள அரச அலுவலர்களின் குறை­க­ளைக் கேட்­ட­றிந்­தார். கிரா­ம­சக்தி மற்­றும் நடை­பெற வேண்­டிய அபி­வி­ருத்தி வேலை­கள் குறித்து விவா­திக்­கப்­பட்­டன. முத­லாம் கட்ட கிரா­ம­சக்தித் திட்­டம் நிறை­வ­டைந்து இரண்­டாம் கட்ட கிராம சக்தி நிகழ்ச்சி திட்­டம் பற்­றிக் கவ­னம் செலுத்­தப்­பட்­டது.
அதன்­பின்­னர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்த ஆளு­நர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
மக்­க­ளின் கஷ்­டங்­களைகிரா­ம­அ­லு­வ­லர்­க­ளி­ட­மி­ருந்து மட்­டுமே கேட்­டுத் தெரிந்­து­கொள்­ள­மு­டி­யும். அபி­வி­ருத்­தி­க­ளைத் தொலை­நோக்­குப்­பார்­வை­யு­டன் செய்ய வேண்­டும். மக்­கள் ஆத­ரவை எப்­ப­டிப் பெற­லாம் என்று சிந்­தித்­த ­போது அதற்கு பொருத்­த­மா­ன­வர்­கள் கிராம அலு­வ­லர்­கள்­தான்.
கிராம அலு­வ­லர்­கள் ஊடாக
பிரச்­சி­னை­கள் தெரி­ய­வ­ரட்­டும்
மக்­க­ளின் அன்­றா­டப் பிரச்­சி­னை­க­ளு­டன் வாழ்­வி­ய­லு­ட­னும் தொடர்பு கொண்­ட­வர்­கள்  கிரா­ம­அ­லு­வ­லர்­கள்.­ அவர்­கள் மக்­க­ளு­டன் தொடர்பு கொண்டு கருத்­துக்­க­ளைப் பெற்று மாவட்ட செய­ல­கம் ஊடாக எமக்கு கிடைக்­கும் வண்­ணம் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.
கிரா­ம­சக்தித் திட்­டத்­தில் குறை­பா­டு­கள் இருந்­தால் நிவர்த்தி செய்­யப்­ப­டும். மன்­னார் மாவட்­டத்­துக்­கான அபி­வி­ருத்­தி­யில் அனை­வ­ரும் கரி­சனை கொள்ள வேண்­டும் – என்று ஆளு­நர் ராக­வன் தெரி­வித்­தார்.
ஊட­கங்­களை மறுத்­த­மைக்கு
ஆளு­நர் கூறும் விளக்­கம் இது
இதே­வேளை, செய­ல­கத்­தில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டது. ‘ஆளு­ந­ரின் மக்­கள் தொடர்பு அதி­காரி என்று அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வர் ஊட­க­வி­ய­லா­ளர்­களை உள்ளே செல்ல அனு­ம­திக்­க­வில்லை.
எதற்­காக ஊட­க­வி­ய­லா­ளர்­களை உள்ளே அனு­ம­திக்­க­வில்லை என்று இறு­தி­யில் ஆளு­நர் ராக­வ­னி­டம் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கேட்­ட­னர். அதற்­குப் பதி­ல­ளித்த ஆளு­நர் ராக­வன்,  “நாங்­கள் முன்­வைக்­கும் கருத்­துக்­கள் வெற்­றி­ய­டைய வேண்­டும். அர­சி­யல் வாதி­கள் மக்­க­ளுக்கு வாக்­கு­களை மட்­டுமே வழங்­கிச் செல்­வார்­கள். நான் மக்­களை வெற்­றி­பெ­றச்­செய்ய வந்­துள்­ளேன். மக்­கள் வெற்றி பெற்­ற­வு­டன் வெற்றி மேடை­யில் ஊட­கத்­தி­ன­ரு­டன் சந்­திப்­பேன்” என்று தெரி­வித்­தார்.
நிகழ்­வில் மன்­னார் மாவட்­டச் மேல­திக செய­லர் சி.குண­பா­லன், ஆளு­ந­ரின் செய­லர் இ.இளங்­கோ­வன் மற்­றும் மாவட்­டத்­தின் பிர­தேச செய­லர்­கள்,  பிர­தேச சபைத் தவி­சா­ளர்­கள், கிராம அலு­ வ­லர்­கள், மாவட்­டச் செய­லக அலு­வ­லர்­கள் கலந்து கொண்­ட­னர்.

 

You might also like