அபிவிருத்தி வேலைகளுக்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன

33

தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், ரெலோ அமைப்­பின் தலை­வ­ரு­மான செல்­வம் அடைக்­க­ல­நா­த­னால் மன்­னார் மாவட்­டத்­தில் கிராம எழுச்சித் திட்டத்தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் வேலைத்­திட்­டங்­க­ளுக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்­கள் நேற்றுமுன்­தி­னம் மாலை வைபவ ரீதி­யாக கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

முதற்­கட்­ட­மாக மன்­னார் மாவட்­டத்­தில் வசந்­த­பு­ரம் சிறி மாணிக்­கப்­பிள்­ளை­யார் ஆல­யம், நடுக்­குடா வேளாங்­கன்னி ஆல­யம், பாவிலு பட்­டங்­கட்டி குடி­யி­ருப்பு, குழந்­தை­யேசு ஆல­யம், பருத்­திப்­பண்ணை தோமை­யார் ஆல­யம், பூலார் குடி­யி­ருப்பு, சின்­னப்­பர் ஆல­யம், தலை­மன்­னார் பியர் சிறி­தேவி முத்­து­மாரி அம்­மன் ஆல­யம், தோட்­ட­வெளி வேத­சாட்­சி­க­ளின் இராக்­கினி ஆல­யம், ஜோசப்­வாஸ்­ந­கர் உள்­ளக வீதி­கள், கொன்­னை­யன் குடி­யி­ருப்பு, பிலிப்­பு­நே­ரி­ யார் ஆல­யம், தாழ்­வு­பாடு ஆல­ய­வீதி, கீரி சிறி­மு­ரு­ கன் ஆல­யம், கீரி கர்த்­தர் ஆல­யம், பட்­டித்­தோட்­டம் சரஸ்­வதி வீதி, செல்­வ­ந­கர் உள்­ளக வீதி, ஆகிய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை மேற்­கொள்­ளு­வ­தற்­கான உறு­திப்­ப­டுத்­திய படி­வங்­கள் வழங்கி வைக்­கப்­பட்­டுள்­ளன.

தமி­ழீழ விடு­தலை இயக்­கம் ரெலோ அமைப்­பின் மன்­னார் மாவட்ட அமைப்­பா­ள­ரும், மன்­னார் பிர­தேச சபை உறுப்­பி­ன­ரு­மான ஏ.ரி.மோகன்­ராஜ் தலை­மை­யில், மன்­னார் நக­ர­சபைத் தலை­வர் ஞ.அன்­ரனி டேவிட்­சன், ரெலோ இயக்­கத்­தின் கொள்கை பரப்­புச் செய­லர் கணே­ச­லிங்­கம், மன்­னார் நகர சபை உறுப்­பி­னர் ஐங்­க­ர­சர்மா, உள்­ளிட்ட குழு­வி­னர் நேரில் சென்று உரி­ய­வர்­க­ளி­டம் கைய­ளித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like