அமெரிக்காவில் – சர்கார் படக்குழு!!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சர்கார் படப்பிடிப்புக்கு இடையே எடுக்கப்பட்ட ஒளிப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சர்கார் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்முரமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் விஜய்யின் அறிமுகப் பாடலை லாஸ் வேகாஸ் நகரில் படமாக்கி வருகிறது படக்குழு

இதில் விஜய், வரலட்சுமியுடன் வெளிநாட்டு நடனக்கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர்.இந்தப் பாடல் படப்பிடிப்பின் போது, எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் விஜய்யுடன் வெளிநாட்டு நடனக்கலைஞர்கள் இருப்பது போல் அனைத்துப் ஒளிப்படங்களும் உள்ளன.

அமெரிக்கா படப்பிடிப்பை முடித்துவிட்டு, சில முக்கியமானக் காட்சிகளை சென்னையில் படமாக்கவுள்ளனர். அதோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது. தீபாவளி வெளியீடு என்று அறிவித்துவிட்டதால், இறுதிக்கட்டப் பணிகளிலும் படக்குழு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது.

Shares
  • Facebook
  • Twitter
  • Google+
Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close