அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம் தொடர்ந்­தும் பேச்சு நடத்­து­வோம்

கூறு­கி­றார் ரணில்

தற்­போது சிறை­யில் உள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளில் பலர் மீது குற்­றம் நிரூ பிக்­கப்பட்­டுள்­ளது. இந்த அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் நீதி அமைச்­சரே கவ­னம் செலுத்தவேண்­டும். தமிழ் கைதி­க­ளின் விடு­தலை தொடர்­பாக  நாம் தொடர்ந்­தும் பேசு­வோம். இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.

இதே­வேளை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யும் இணைந்து எதிர்­வ­ரும் 25ஆம் திகதி நாடா­ளு­மன்­றத்­தில் சபை ஒத்­தி­வைப்பு தீர்­மான வரை­வைக் கொண்டு வர­வுள்­ளன. இதன் மீதான விவாத்­துக்கு சுமார் 2 மணி நேரம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

நாடா­ளு­மன்­றத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன், தலைமை அமைச்­ச­ரி­டம் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார்.
இதற்­குப் பதி­ல­ளித்து தலைமை அமைச்­சர் தெரி­வித்­த­தா­வது, 2001ஆம் ஆண்டு காலப் பகு­தி­யில் சில சந்­தேக நபர்­கள் விடு­தலை செய்­யப்­பட்­ட­னர். அவர்­கள் மீதான குற்­றச்­சாட்­டு­கள் பார­தூ­ர­மா­ன­தாக இல்­லாத கார­ணத்­தி­னால் அவர்­கள் விடு­தலை செய்­யப்­பட்­ட­னர்.

அதற்கு பின்­னைய ஆட்­சி­யி­லும் விடு­த­லைப்­பு­லி­கள் பலர் விடு­தலை செய்­யப்­பட்­ட­னர். எமது ஆட்­சி­யி­லும் 2015 ஆம் ஆண்­டுக்­கும் பின்­னர் நாம் சிலரை விடு­வித்­துள்­ளோம். இப்­போ­தும் சிறை­யில் உள்ள அர­சி­யல் கைதி­கள் குறித்த குற்­றங்­கள் நிரு­பிக்­கப்­பட்­டுள்­ளன. அவர்­களை விடு­தலை செய்­வது குறித்து நீதி­ய­மைச்­ச­ரு­டன் பேசு­வதே சிறந்­தது. இந்த விட­யம் தொடர்­பாக நாம் தொடர்ந்­தும் பேசு­வோம் – என்­றார்.

You might also like