அரச சார்பற்ற நிறுவனத்தில் திடீர் சோதனை!!

மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை, திடீரென பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து சோதனையிட்டனர். எனினும் அங்கு எதுவித தடயங்களும் மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சோதனை என்ற போர்வையில் தங்கள் கடமைகளை தடுத்து நிறுத்தி, அநாகரியமாக நடந்து கொண்டதுடன், அச்சுறுத்தும் தொணியில் படையினர் அங்கிருந்தவர்களுடன் உரையாடினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 45 நிமிடங்கள் சோதனை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

You might also like