அரச தலை­வர் மீதான கொலைச் சதியை அரசு தெளி­வு­ப­டுத்த வேண்­டும்!!

அரச தலை­வர் மீதான கொலை முயற்­சிக்­கான சதி தொடர்­பான உண்­மை­கள் நாட்டு மக்­க­ளுக்­குத் தெரி­யா­மல் மறைத்து வைக்­கப்­ப­டு­வது நல்­ல­தா­கத் தெரி­ய­வில்லை. நாட்­டின் தலை­வ­ரைக் கொல்­வ­தற்­கான சதித்­திட்­டம் தீட்­டப்­ப­டு­வ­தென்­பது சாதா­ரண விட­ய­மல்ல. இந்த நாட்டு மக்­கள் அனை­வ­ருக்­கும் கவலை தரக்­கூ­டி­ய­தொரு விட­ய­மா­க­வும் இது அமைந்­துள்­ளது. ஆகவே இது தொடர்­பா­கப் பக்­கச் சார்­பின்றி விசா­ர­ணை­கள் நடத்­தப்­பட்டு உண்­மை­க­ளைப் பகி­ரங்­கப்­ப­டுத்­து­வது ஆட்­சி­யா­ளர்­க­ளின் தலை­யாய கட­மை­யா­கும்.

இந்­தி­யா­வின் உளவு அமைப்­பான ‘றோ’ தன்­னைக் கொலை செய்­வ­தற்­குச் சதித்­திட்­ட­மொன்­றைத் தீட்­டி­ய­தாக அமைச்­ச­ர­வைக் கூட்­ட­மொன்­றின்­போது அரச தலை­வர் கூறி­ய­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. ஆனால் பின்­னர் அரச தலை­வ­ரால் இந்­தக் கருத்து மறுத்­து­ரைக்­கப்­பட்­டது. இதற்கு என்ன கார­ண­மென்­பது தெரி­ய­வில்லை. ஆனால், நாட்­டின் தலை­வ­ரொ­ரு­வர் ஒரு கருத்தை வெளி­யி­டும்­போது பல தட­வை­கள் சிந்­தித்­துப் பார்த்­தி­ருக்க வேண்­டும். அதி­லும் இந்த முக்­கி­ய­மான விட­யத்­தில் அவர் முத­லில் கூறிய கருத்­தையே மக்­கள் ஏற்­றுக்­கொள்­வார்­கள். இதில் ஏதோ தவறு நடந்­துள்­ளமை தெளி­வா­கத் தெரி­கி­றது. முழு­மை­யாக விசா­ரணை செய்து உண்மை வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்­டும்

அரச தலை­வர் மீதான கொலை முயற்­சிக்­கான சதி பார­தூ­ர­மான ஒன்­றொன அவ­ரது ஆலோ­ச­கர்­கள் கூறி­யுள்­ள­னர். இதைக் குறைத்து மதிப்­பி­டு­வ­தற்­குச் சில அர­சி­யல்­வா­தி­கள் முயற்சி செய்­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர்­கள் இந்­தச் சதி தொடர்­பாக முழு விசா­ர­ணை­கள் இடம்­பெற்று உண்­மை­கள் வெளிக்­கொ­ண­ரப்­ப­ட­வேண்­டும் என­வும் தெரி­வித்­துள்­ள­னர். அவர்­கள் கூறு­வதை முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. நாட்­டில் நில­வு­கின்ற அர­சி­யல் குழப்ப நிலை­யால் அரச தலை­வ­ரைக் கொலை செய்­வ­தற்­கான அர­சி­யல் சதி­யொன்று தீட்­டப்­பட்­டி ­ருக்­க­லாம் என­வும் கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் பக்­கச் சார்­பில்­லாத விசா­ர­ணை­கள் மூல­மா­கவே உண்­மை­களை அறிந்­து­ கொள்ள முடி­யும்.

இந்­திய உயர்­மட்­டத்­தில் அதிர்ச்சி
அரச தலை­வர் மீதான கொலை முயற்­சிச் சதி­யில் இந்­தி­யா­வின் பெய­ரும் இழுக்­கப்­பட்­டமை இந்­திய உயர் மட்­டத்­தில் பெரும் அதிர்ச்­சி­யைத் தோற்­று­வித்­து­விட்­டது. இலங்­கைக்­கான இந்­திய அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர், அரச தலை­வ­ரைச் சந்­தித்­துப் பேசி­ய­தும் இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­தி­ர­மோடி தொலை­பேசி வாயி­லாக அரச தலை­வ­ரு­டன் பேசி­ய­தும் இதை உணர்த்­து­கின்­றன. இதே­வேளை இந்­திய அர­சி­யல் மட்­டத்­தி­லும் இதன் பிர­தி­ப­லிப்­பைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

கொலை முயற்சிச் சதி­யில் இந்­தி­யா­வின் பங்கு இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டமை இந்­தி­யா­வுக்கு இழுக்­கைத் தேடித் தந்­தி­ருப்­ப­தா­கவே அங்கு கரு­தப்­ப­டு­கின்­றது. இந்த நிலை­யில் முன்­னர் வெளி­வந்த செய்­தி­க­ளில் எவ்­வித உண்­மை­யும் இல்­லை­யென அரச தலை­வர் கூறு­ம­ள­வுக்கு இந்­தி­யா­வின் அழுத்­தம் காணப்­பட்­டி­ருக்­கி­றது. இதைத் தொடர்ந்து அரச தலை­வ­ரின் பிந்­திய அறிக்கை தொடர்­பில் இந்­தி­யத் தலைமை அமைச்­சர் பாராட்­டி­ய­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. ஆனால், இதி­லுள்ள உண்மை நிலை தொடர்­பா­கத் தெளி­வில்­லாத நிலை­யில் மக்­கள் உள்­ள­னர்.

கூட்டு எதி­ர­ணி­யி­ரின் கருத்து
அரச தலை­வ­ரைக் கொலை செய்­கின்ற அவ­சி­யம் இந்­தி­யா­வுக்­குக் கிடை­யா­ தெ­னக் கூட்டு எதி­ர­ணி­யின் சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதன் முக்­கி­யஸ்­தர்­க­ ளில் ஒரு­வ­ரான வாசு­தேவ நாண­யக்­கார இதைத் தெரி­வித்­துள்­ளார். கொலைச் சதித்­திட்­டம் தொடர்­பான விசா­ர­ணை­க­ ளைத் திசை திருப்­பு­வ­தற்­கா­கவே இவ்­வா­றான வதந்­தி­கள் பரப்­பப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் மேலும் தெரி­வித்­துள்­ளார். ஆனால் சதித்­திட்­டம் வகுக்­கப்­பட்­டதை அவர் மறுக்­க­வில்லை. இந்த நிலை­யில் இலங்­கைக்­கும் இந்­தி­யா­வுக்கு இடை­யி­லான நல்­லு­ற­வைச் சீர்­கு­லைப்­ப­தற்­காகச் சிலர் முயற்சி செய்­வ­தா­க­வும் இதன் பின்­ன­ணி­யில் நான்கு முக்­கி­யஸ்­தர்­கள் உள்­ள­தா­க­வும் இவர்­கள் விரை­வில் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என­வும் அமைச்­சர் மகிந்த சம­ர­சிங்க தெரி­வித்­துள்­ளார். இவர் அரச தலை­வ­ரின் தலை­ம­யி­லான சிறீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யைச் சேர்ந்­த­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சீனா மகிழ்ச்சி தெரி­விக்­கும்
சீனா­வும், இந்­தி­யா­வும் தமது ஆதிக்­கத்தை இலங்­கை­யில் நிலை நாட்­டு­வ­தற்­குப் போட்டி போட்­டுக்­கொண்­டி­ருக்­கும் நிலை­யில் அரச தலை­வர் மீதான கொலைச் சதி தொடர்­பாக இந்­தி­யா­வின் பெயர் இழுக்­கப்­பட்­ட­தற்­குச் சீனா மகிழ்ச்­சி­யைத் தெரி­வித்­தி­ருக்­கு­மென நம்­ப­லாம். சீனா பிற நாடு­க­ளுக்­குக் கடன்­களை வழங்­கி­விட்டு அவற்றை அடி­மை­யாக வைத்­தி­ருப்­ப­தற்கு எத்­த­னிப்­ப­தாக அமெ­ரிக்கா மற்­றும் மலே­சியா நாட்டு அரச தலை­வர்­கள் கூறி­யுள்­ளமை சீனா­வுக்கு அசௌ­க­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தவே செய்­யும். இலங்­கைக்­கும் சீனா பெரும் தொகை­யான கடன்­களை வழங்­கி­யுள்­ளது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தைத் தன்­வ­சப்­ப­டுத்­தி­ய­து­டன் கொழும்பு துறை­முக நக­ரின் அபி­வி­ருத்­திப் பணி­க­ளி­லும் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது. கொழும்­புத் துறை­மு­கத்­தின் கிழக்கு முனை­யத்தை இந்­தி­யா­வுக்கு வழங்­கு­வது தொடர்­பில் சர்ச்­சை­கள் கிளம்­பி­யுள்ள நிலை­யில் அரச தலை­வர் மீதான கொலை முயற்சி சதித்­திட்­டம் தொடர்­பான செய்­தி­கள் வெளி­வந்­துள்­ளமை முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றது. எது எப்­ப­டி­யி­ருந்த போதி­லும் இந்­தச் சதித்­திட்­டம் தொடர்­பான உண்­மை­கள் மூடி மறைக்­கப்­ப­டாது மக்­கள் முன்­பாக வெளிப்­ப­டுத்­த­வேண்­டி­யது அர­சின் முக்­கிய பொறுப்­பா­கும்.

You might also like