side Add

அர்த்தமிழக்கும்- அறவழிப் போராட்டங்கள்!!

தோட்­டத் தொழி­லா­ளர்­க­ளின் அடிப்­ப­டைச் சம்­ப­ளத்தை ஆயி­ரம் ரூபா­வாக அதி­க­ரிப்­பது உட்­ப­டச் சில கோரிக்­கை­களை முன்­வைத்து மலை­யக இளை­ஞர்­க­ளால் கொழும்பு – கோட்டை ரயில் நிலை­யத்­துக்கு முன்­பாக மேற்­கொள்­ளப்­பட்டு வந்த உணவு தவிர்ப்­புப் போராட்­டம் சில மத­கு­ரு­மா­ரி­ன­தும், பொது அமைப்­புக்­க­ளி­ன­தும் கோரிக்­கை­களை அடுத்து நான்­கா­வது நாளு­டன் கைவி­டப்­பட்­டது.

இளை­ஞர்­கள் தமது போராட்­டத்தை முற்­றா­கக் கைவி­ட­வில்லை என­வும், எதிர்­வ­ரும் 15ஆம் திக­திக்­கி­டை­யில் தங்­கள் கோரிக்­கை­கள் நிறை­வேற்­றப்­ப­டா­விட்­டால் போராட்­டம் நாட்­டின் பல பகு­தி­க­ளுக்­கும் விரி­வு ­ப­டுத்­தப்­பட்­டுப் பெரிய அள­வில் மேற்­கொள்­ளப்­ப­டும் என­வும் தெரி­வித்­த­னர்.

உணவு தவிர்ப்­பின்
மகோன்­ன­தம்
உணவு தவிர்ப்­புப் போராட்­டம் என்­பது உயி­ரைப் பண­ய­மாக முன்­வைத்து நடத்­தப்­ப­டும் அர்ப்­ப­ணிப்பு மிக்க போராட்­ட­மா­கும். எதிர்த் தரப்­பி­ன­ருக்கு எவ்­வித ஊறு­மின்­றித் தம்­மைத்­தாமே வருத்தி உயி­ரைக் கொடுத்து சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளின் மன­தைக் கனிய வைத்­துக் கோரிக்­கை­களை அடைய முயற்­சிக்­கும் ஒரு போராட்­ட­மா­கும். ஏனைய ஆர்ப்­பாட்­டங்­கள், வேலை­நி­றுத்­தங்­கள், பேச்­சுக்­கள் போன்ற ஜன­நா­ய­கப் போராட்ட வழி­மு­றை­கள் பய­னற்­றுப் போகும் நிலை­யி­லேயே இப்­ப­டி­யான ஒரு கடி­ன­மான போராட்­டத்­தில் இறங்க வேண்­டிய கட்­டா­யம் எழு­கி­றது.

இளை­ஞர்­க­ளின் போராட்­டத்­துக்­குத் தடை­கள்
மலை­யக மக்­க­ள் முன்னெடுத்த பேச்­சுகளின் முடிவில் தொழிற்­சங்­கள், அரச தரப்பு எனச் சகல தரப்­பி­னர் மீதும் நம்­பிக்­கை­யி­ழந்து விட்ட நிலை­யில், இளை­ஞர்­கள் தமது உணவு தவிர்ப்­புப் போராட்­டத்­தைக் கோட்டை ரயில் நிலை­யத்­துக்கு முன்­னால் ஆரம்­பித்­த­னர். ஆனால் அவர்­க­ளின் போராட்­டத்­துக்கு வழங்­கிய முதல் பதி­லா­கப் போராட்­டம் நடத்­திய இளை­ஞர்­கள் அமைத்­தி­ருந்த கூடா­ரத்தை ரயில் திணைக்­க­ளம் அகற்­றி­யது. எனி­னும் இளை­ஞர்­கள் போராட்­டத்­தைக் கைவி­டா­மல் வெயி­லி­லும், பனி­யி­லும், மழை­யி­லும் தொடர்ந்­த­னர்.

அதே­வேளை மலை­ய­கத் தலை­மை­க­ளும் இளை­ஞர்­க­ளின் போராட்­டம் தொடர்­பாக எந்த வித நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுக்­க­வில்லை. மாறாக அவர்­கள் ஜன­நா­ய­கத்­தை­யும் ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சை­யும் பாது­காப்­ப­தில் அதிக அக்­கறை காட்­டி­னர். மலை­யக மக்­க­ளின் பெரிய தொழிற்­சங்­க­மான இலங்­கைத் தோட்­டத் தொழி­லா­ளர் சங்­கத்­தின் பொதுச் செய­லர் ஆறு­மு­கம் தொண்­ட­மான் தனது உற­வி­ன­ரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்­வ­தற்­காக இந்­தியா சென்­று­விட்­டார். இப்­ப­டி­யாக ஆத­ர­வ­ளிக்க வேண்­டி­ய­வர்­கள் அலட்­சி­யப் போக்­கைக் காட்­டிக் கொண்­ட­போ­தி­லும் மலை­யக மக்­கள் மலை­ய­கத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்தித் தமது பல­மான ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­னர்.

தொழி­லா­ளர்­க­ளின் எச்­ச­ரிக்கை
போராட்­டங்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட பின்­னர் சில தோட்­டங்­க­ளின் தொழி­லா­ளர்­கள் இனித் தொழிற் சங்­கச் சந்­தாப்­ப­ணம் வழங்­கப் போவ­தில்­லை­யென எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர். தொழி­லா­ளர்­கள் தொழிற்­சங்­கங்­கள் மீது நம்­பிக்­கை­யி­ழப்­ப­தற்கு நிறை­யவே கார­ணங்­கள் உண்டு. அடிப்­ப­டை­யில் தொழிற்­சங்­கங்­கள் என்­பன தொழி­லா­ளர்­களை ஒரு குடை­யின் கீழ் அணி­தி­ரட்டி அந்­தப் பலத்­தின் மூலம் தொழி­லா­ளர்­க­ளின் நலன்­க­ளைப் பாது­காப்­ப­தற்­கென உரு­வாக்­கப்­பட்­ட­வை­யா­கும். ஆனால் மலை­ய­கத் தொழிற்­சங்­கத் தலை­மை­கள் மலை­யக மக்­க­ளின் நலன்­க­ளில் அக்­கறை காட்­டு­வ­தை­விட தங்­கள் சொந்த அர­சி­யல் நலன்­க­ளுக்கு மலை­யக மக்­க­ளின் பலத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தி­லேயே அக்­கறை காட்டி வரு­கின்­ற­னர். அது­மட்­டு­மன்றி தொழிற்­சங்­கப் போட்­டி­கள் கார­ண­மாக மலை­யக மக்­கள் ஒன்­றி­ணைத்து ஒரு பல­மான சக்­தி­யா­கத் திரண்­டு­வி­டாக்­கூ­டாது என்­ப­தி­லும் கவ­னம் செலுத்­து­கின்­ற­னர்.

ஆயி­ரம் ரூபா­வும் ஆறு­மு­கம் தொண்­ட­மா­னும்
ஏறக்­கு­றைய இரண்­டரை வரு­டங்­க­ளின் முன் கூட்டு ஒப்­பந்­தத்­துக்­கான பேச்­சு­கள் இடம்­பெ­ற­வி­ருந்த வேளை­யில் இலங்­கைத் தொழி­லா­ளர் காங்­கி­ர­ஸின் பொதுச் செய­லர் ஆறு­மு­கம் தொண்­ட­மான் ஆயி­ரம் ரூபா அடிப்படைச் சம்­ப­ளக் கோரிக்­கையை முன்­வைத்­தார். முத­லா­ளி­மார் சம்­மே­ள­னத்­து­டன் பல சுற்­றுப் பேச்­சுக்­களை நடத்­திய பின்பு 500 ரூபா சம்­ப­ளத்­துக்கு தொழிற் சங்­கக் கூட்டு அமைப்பு சம்­ம­தம் தெரி­வித்­துக் கையெ­ழுத்­திட்­டது. ஆனால் கூடு­த­லா­கக் கொழுந்து பறிப்­பது, கூடு­தல் நாள்­கள் வேலை செய்­வது போன்ற பணி­க­ளூ­டாக 750 ரூபா ஊதி­ய­மா­கப் பெற முடி­யு­மென ஆறு­மு­கம் தொண்­ட­மான் தொழி­லா­ளர்­க­ளுக்­குப் புதிய கணக்­குக் கற்­பித்­துச் சமா­ளித்­தார்.

தற்­ச­ம­யம் கூட்டு ஒப்­பந்­தம் செய்­ய­வுள்ள நிலை­யில் ஆயி­ரம் ரூபா சம்­ப­ளக் கோரிக்­கையை முன்­வைத்­த­வர் ஆறு­மு­கம் தொண்­ட­மான் தான். அது­மட்­டு­மன்றி ஆயி­ரம் ரூபா சம்­ப­ளத்­தைப் பெற்­றுக் கொடுக்க முடி­யா­விட்­டால் தனது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யைத் துறக்­கப்­போ­வ­தா­க­வும் அவர் சவால் விட்­டார். ஆனால் ஆயி­ரம் ரூபா சம்­ப­ளத்­தைப் பெற்­றுக் கொடுக்கு முன்பே மகிந்­த­வின் திடீர் அமைச்­ச­ர­வை­யில் அமைச்­சுப் பத­வி­யைப் பெற்­றுக் கொண்­டார். மகிந்­த­வின் அமைச்­ச­ரவை நீதி­மன்ற இடைக்­கா­லத் தீப்­பின் மூலம் இயங்க முடி­யாத நிலை­யில் தொண்­ட­மான் ஆயி­ரம் ரூபா சம்­ப­ளக் கோரிக்­கையை முன்­வைத்து வேலை­நி­றுத்­தப் போராட்­டத்­தில் இலங்­கைத் தோட்­டத் தொழி­லா­ளர் சங்­கத்தை இறக்­கி­னார். அர­சி­யல் குழப்­பங்­கள் நில­வும் நிலை­யில் அது வேலை­நி­றுத்­தப் போராட்­டத்­துக்­குப் பொருத்­த­மான சந்­தர்ப்­பம் அல்ல எனச் சொல்லி பழனி திகாம்­ப­ர­மும், இரா­தா­கி­ருஷ்­ண­னும் வேலை நிறுத்­தத்­தில் கலந்­து­கொள்­வ­தற்கு முத­லில் மறுத்த போதி­லும் பின்பு தொழி­லா­ளர் ஒற்­று­மை­யைப் பேணும் வகை­யில் தாங்­க­ளும் கலந்து கொள்­வ­தாக அறி­வித்­த­னர்.

அனைத்து மலை­யக மக்­க­ளும் ஒன்­றி­ணைந்து முத­லா­ளி­மார் சம்­மே­ள­னத்­தைப் பணிய வைக்­கக் கூடிய ஒரு வாய்ப்பை உருவாக்கினர். அந்த வேளை­யில் அரச தலை­வர் தொழி­லா­ளர் சம்­ப­ளப் பிரச்­சி­னை­யைத் தீர்த்து வைப்­ப­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளார் எனக் கூறி வேலை­நி­றுத்­தப் போராட்­டத்­தைத் தொண்­ட­மான் கைவிட்­டார்.

இப்­ப­டித் தொடர்ந்­தும் மலை­ய­கத் தலை­வர்­க­ளால் ஏமாற்­றப்­பட்ட நிலை­யி­லேயே இளை­ஞர்­கள் உணவு தவிர்ப்­புப் போராட்­டத்­தில் இறங்­கி­னர்.

அறப்­போ­ராட்­டத்தை மதிக்­காத அரசு
இளை­ஞர்­க­ளின் நேர்­மை­யையோ, மலை­யக மக்­க­ளின் நலன்­கள் மீது கொண்ட அக்­க­றை­யையோ அவர்­க­ளின் அர்ப்பணிப்பு உணர்­வையோ, எவ­ரும் குறைத்து மதிப்­பிட்டு விட முடி­யாது. ஆனால் அவர்­க­ளின் மேன்­மையை மலை­ய­கத் தலை­மை­கள் பொருட்­ப­டுத்­தா­மை­தான் கவ­லை­ய­ளிக்­கும் விட­ய­மா­கும். ஆனால் உணவு தவிர்ப்­புப் போராட்­டம் உட்­பட அற­வ­ழிப் போராட்­டங்­க­ளுக்கு இது­வரை வழங்­கப்­பட்ட பெறு­ம­தி­யைக் கடந்த கால அனு­ப­வங்­க­ளூ­டாக அல­சிப் பார்ப்­பது இந்த வே­ளை­யில் அவ­சி­ய­மா­கி­றது.

1987ஆம் ஆண்டு தியாகி திலீ­பன் 5 கோரிக்­கை­களை முன்­வைத்து உணவு தவிர்ப்­புப் போராட்­டம் நடத்­தி­ய­போது அதை இந்­திய அரசோ, இலங்கை அரசோ பொருட்­ப­டுத்­த­வில்லை. அவர் 12ஆம் நாள் உயிர்­து­றந்­தார். அன்­னை­பூ­பதி அற­வ­ழிப் போராட்­டம் நடத்­திய 30ஆம் நாள் உயி­ரைத் தியா­கம் செய்­தார். தமிழ் அர­சி­யல் கைதி­கள் பல­முறை உணவு தவிர்ப்­புப் போராட்­டத்தை மேற்­கொண்டு சாவின் எல்லை வரைச் சென்­றும் சில வாக்­கு­று­தி­கள் வழங்­கப்­பட்டு அவர்­க­ளின் போராட்­டங்­கள் இடை­நி­றுத்­தப்­பட்­டன. இது­வரை அவர்­க­ளுக்­குத் தீர்­வில்லை. காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ரம், காணி விடு­விப்பு, அர­சி­யல் கைதி­கள் விடு­தலை என்­பன தொடர்­பாக மக்­கள் பல போராட்­டங்­களை நடத்­தி­ய­போ­தும் எந்தவித பல­னும் கிட்­ட­வில்லை.

வடக்­குக் கிழக்கு தமிழ்த் தலை­மை­கள் என்­றா­லென்ன, மலை­ய­கத் தமிழ்த் தலை­மை­கள் என்­றா­லென்ன, இவர்­கள் தலை­வர்­க­ளா­கவோ, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவோ, எதிர்க்­கட்­சித் தலை­வ­ரா­கவோ அமைச்­சர்­க­ளா­கவோ மக்­க­ளின் வாக்­கு­கள் மூலமே பதவி பெறு­கின்­ற­னர். ஆனால் மக்­கள் தங்­கள் பிரச்­சி­னை­கள் தொடர்­பா­கப் போராட்­டங்­களை நடத்­தும்­போது அவற்­றுக்­குத் தலை­மை­தாங்கி விரி­வு­ப­டுத்தி ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு நெருக்­கடி கொடுத்துப் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு பெற்றுக் கொடுப்­ப­தில் அக்­கறை காட்­டு­வ­தில்லை. ஜன­நா­ய­கத்­தைக் காப்­பாற்­று­வது என்ற பெயரில் ரணி­லின் ஆட்­சி­யைப் பாது­காப்­ப­தில் காட்­டிய அக்கறையில் ஒரு பகு­தி­யைக் கூட மக்­கள் தொடர்­பாக முன்­னெ­டுக்­க­ வில்லை. இப்­ப­டி­யான நிலை­யில் அற­வ­ழிப் போராட்­டங்­கள் அர்த்­த­மி­ழந்து போவ­தில் ஆச்­ச­ரி­யப்­பட எது­வு­மில்லை.

You might also like