ஆசிரியருக்கு மூன்றாவது திருமணம் -மடக்கிப் பிடித்த இரண்டாவது மனைவி!!

யாழ்ப்பாணத்தில் ஒரு திருமணம் முடித்து விட்டு இரண்டு பிள்ளைகளுடன் மனைவியை கைவிட்டு, கிளிநொச்சியில் வேறு ஒரு திருமணம் முடித்து விட்டு அப்பெண்னையும் கைவிட்டுவிட்டு இன்று வவுனியாவில் மூன்றாவது திருமணம் செய்ய முயற்சித்துள்ளார் கில்லாடி ஆசிரியர்.

குறித்த ஆசிரியர் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பகுதியில் திருமணம் முடித்து இரண்டு இளம் பிள்ளைகளுடன் அப் பெண்னைக் கைவிட்டுள்ளார். கடந்த ஒருவருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சிப் பெண்ணைத் திருமணம் முடித்துள்ளார்.

வவுனியா கூமாங்குளம் பகுதியிலுள்ள பெண் ஒருவரைத் திருமணம் முடிக்க முயற்சித்துள்ளார். இது தொடர்பில் தகவலறிந்த இரண்டாவது மனைவி, தெரிந்தவர்களின் உதவியுடன் இன்று இடம்பெறவிருந்த மூன்றாவது திருமணத்தை அறிந்து, அதனை தடுத்து நிறுத்தும் நோக்குடன் வவுனியா சென்றார்.

இன்று காலை வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற இருந்த திருமணமே ஆலய நிர்வாகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆலய வளவிலுள்ள திருமண மண்டபத்தில் இடம்பெற்ற திருமணத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

குறித்த மூன்று திருமணங்கள் முடிக்க முயன்ற புதுமாப்பிளை பரந்தன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றுவதாகவும் இரண்டாவது மனைவி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று இடம்பெறவிருந்த மூன்றாவது திருமணத்தினை ஏற்பாடு மேற்கொண்ட உறவினர்கள் புதுமாப்பிள்ளையான ஆசிரியரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

You might also like