ஆண் வாரிசு இல்லை – பெண் எடுத்த விபரீத முடிவு!!

ஆண் வாரிசு இல்லையே என்ற மனவிரக்தியில் பெண் ஒருவர் விபரீத முடிவெடுத்துள்ளார். தனது 5 மகள்களையும் கொன்று தானும் உயிரிரை மாய்த்துக் கொண்டார்.

இந்தச் சம்பவம் இந்தியா ராஜஸ்தான் மாநிலம் பாவாடி காலா கிராமத்தில் நடந்துள்ளது.

தொடர்ச்சியான பெண் குழந்தைகள் பிறந்ததால் விரக்தியடைந்த பெண், கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தில், பிள்ளைகளைக் கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். பின்னர் தானும் அந்த கிணற்றில் குதித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது பற்றி அறிந்த அந்த ஊர் மக்கள் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், 6 பெண்களதும் சடலங்களை மீட்டனர்.

You might also like