ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்ப்போம்!!

அதிக சுவை­யின் கார­ண­மாக  இன்று பிர­பல்­யம் பெற்று வரு­கின்­றன. இந்த உண­வு­க­ளின் சந்­தைப் பெறு­மதி அதி­க­மாக இருப்­ப­தோடு இவற்­றின் சுவை­யா­னது ஆரோக்­கி­யத்­துக்­குக் கேடான அதிக உப்பு, எண்­ணெய் போன்­ற­வற்­றின் சேர்க்கை கார­ண­மா­கவே ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. அதிக அள­வி­லான சீனி மற்­றும் கொழுப்­புக்­கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருப்­ப­தால் இவை அதிக கலோ­ரி­களை கொண்­டுள்­ள­து­டன் குறை­வான நுண்­ணுட்­டுச் சத்­துக்­க­ளையே கொண்­டுள்­ளன. வெற்­றுக் கலோரி உண­வு­கள் என்­றும் இவற்றை அழைக்­கப்­ப­டு­வ­துண்டு. இவற்­றில் புர­தம், கனி­யுப்­புக்­கள் மற்­றும் விற்­ற­மின்­களை காண்­ப­த­ரிது. இல்லை என்­றும்­கூட சொல்­ல­லாம்.

துரித உண­வு­க­ளால்
பாதிப்பு மிக­அ­தி­கம்
உரு­ளைக்­கி­ழக்கு சிப்ஸ், இனிப்­புக்­கள், உரு­ளைக் கிழங்­கி­னா­லும் மாப்­பொ­ரு­ளி­னா­லு­மான தயா­ரிப்­புக்­கள், காப­னேற்­றப்­பட்ட மற்­றும் சுவை­யூட்­டப்­பட்ட பானங்­க­ளான சோடா வகை­கள், பைக்­கற் யூஸ் போன்­றவை இலங்­கை­யில் உட்­கொள்­ளப்­ப­டும் முக்­கி­ய­மான பெறு­ம­தி­யற்ற உண­வு­க­ளா­கும். இந்த உண­வு­களை உண்­ணு­தல் உடல் நலத்­துக்­குக் கேடா­னது. சிறு­வர்­கள் இந்த உண­வு­களை உண்­பதை ஊக்­கப்­ப­டுத்­து­தல் கூடாது. இவற்றை அதி­க­ள­வில் உண்­ப­தால் நீரி­ழிவு, அதிக உடல் நிறை, இதய நோய்­கள், பற்­சி­தைவு போன்ற நோய்­கள் ஏற்­ப­டும் வாய்ப்­புக்­கள் அதி­கம்.

இத்­த­கைய உண­வு­களை பாட­சா­லை­யின் உண­வ­கங்­க­ளில் விற்­பனை செய்­வதை நிறுத்­து­தல் வேண்­டும். இதற்­காக பாட­சாலை அதி­பர் மற்­றும் பாட­சாலை அபி­வி­ருத்­திச் சங்­கத்தினர் போன்­றார் விழிப்­பு­டன் செயற்­ப­டுத்­து­தல் அவ­சி­ய­மா­கும். கல்­வி­ய­மைச்சு மற்­றும் சுகா­தார அமைச்சு என்­பன இது தொடர்­பாக பாட­சா­லை­களை வழி­ந­டத்­து­தல் மிக­வும் அவ­சி­ய­மா­கும். உண­வுப் பொதி­யுள்ள சுட்­டுத்­துண்­டில் (Label) அந்த உண­வில் சேர்க்­கப்­பட்­டுள்ள பொருள்­க­ளின் பட்­டி­யல் இறங்கு வரி­சை­யில் கொடுக்­கப்­பட்­டி­ருத்­தல் வேண்­டும். எமக்கு விளங்­கக்­கூ­டிய மொழி­யில் இவை எழு­தப்­பட்­டி­ருத்­தல் அவ­சி­ய­மா­கும். எமக்கு விளங்­காத மொழி­யில் (அரபு, ஹிந்தி, சீன­மொழி) எழு­தப்­பட்ட சுட்­டுத்­துண்­டு­ ட­னாக உண­வு­க­ளில் என்­னென்ன வகை­யான பொருள்­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளன என்றோ அவற்­றின் அள­வு­கள் தொடர்­பா­கவோ எம்­மால் அறிந்­து­கொள்ள முடி­யாது. எனவே அந்த வகை­யான சுட்­டுத்­துண்­டு­டன் கூடிய உண­வு­களை வாங்­கு­வதை தவிர்த்­தல் நன்று. இது­பற்றி முடி­யு­மா­யின் அப்­ப­குதி பொது­சு­கா­தார பரி­சோ­த­க­ருக்­கும் அறி­விக்க வேண்­டும்.

தவிர்க்­கப்­பட வேண்­டி­யவை
அதிக அள­வில் சீனி, கொழுப்பு மற்­றும் உப்பு சேர்க்­கப்­பட்­டுத் தயா­ரிக்­கப்­பட்ட உண­வு­க­ளைத் தவிர்த்­தல் நன்று. ஒரு முழு உணவு வேளைக்­காக உண்­ணும் உணவு தவிர்ந்த நொறுக்­காக எடுக்­கும் உண­வா­னது 300 கிலோ கலோ­ரிக்கு மேலான சக்­தியை வழங்­கு­மா­யின் அவ்­வா­றான உண­வைத் தவிர்க்­வும். ஐந்து கிராம் கொழுப்­பா­னது ஒரு தேக்­க­ரண்டி எண்­ணெய்க்­குச் சம­மா­னது என்­ப­தும் அறிந்­து­கொள்ள வேண்­டி­யதே. பெற்­றோர்­கள் தமது பிள்­ளை­கள் எவ்­வ­கை­யான உண­வு­க­ளைத் தேர்வு செய்­கின்­ற­னர் என்­பதை அவ­தா­னித்­தல் இன்­றி­ய­மை­யா­த­தா­கும். பெறு­ம­தி­யற்ற உண­வு­க­ளின் பாதிப்­புக்­களை அவர்­க­ளுக்கு ஞாப­கப்­ப­டுத்தி அன்­பு­டன் ஆரோக்­கி­ய­மான உண­வு­க­ளைத் தேர்வு செய்­திட உத­வி­டு­தல் வேண்­டும்.

வல­யக்­கல்வி அதி­கா­ரி­கள், பாட­சா­லை­க­ளை­யும் பாட­சாலை அபி­வி­ருத்­திச் சங்­கங்­க­ளை­யும் கண்­கா­ணித்­துப் பாட­சாலை உண­வ­கங்­க­ளில் இவ்­வ­கை­யான உண­வு­களை விற்­ப­த­னைத் தடை­செய்து ஆராக்­கி­ய­மான உண­வு­கள் கிடைக்க வழி சமைத்­தக் கொடுத்­தல் நன்று. இதன் மூலம் வருங்­கால சமு­தா­யத்தை நோயற்ற சமு­தா­ய­மாக மாற்ற முடி­யும்.

மருத்துவர் பொ.ஜெசிதரன்

You might also like