side Add

ஆலயத்தில் வைத்து கடத்தப்பட்ட இளம் பெண்!!

ஆலயத்துக்குச் சென்ற இளம் பெண் ஒருவர், இளைஞர் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்ட போது துரிதமாகச் செயற்பட்ட பொதுமக்கள், கடத்தல் குழுவிடமிருந்து பெண்ணை மீட்டனர். சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களான இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் நடந்துள்ளது.

தன்னைக் காப்பாற்றுமாறு அவலக் குரலெழுப்பிய நிலையில் இளம்பெண்ணொருவர் முச்சக்கரவண்டியில் கொண்டு செல்லப்படுவதை அவதானித்த பொதுமக்கள், விரைந்து செயற்பட்டு முச்சக்கரவண்டியைப் பின்தொடர்ந்து சென்று களுதாவளை பிரதேச சபைக்கு சமீபமாக முச்சக்கர வண்டியை வழிமறித்துள்ளனர்.

அவ்வேளையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவரும், மற்றைய இளைஞர்கள் இருவரும் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

எனினும் பொதுமக்கள் சாதுரியமாகச் செயற்பட்டு பெண்ணை மீட்டதோடு சந்தேக நபர்களான இளைஞர்கள் மூவரையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காதல் விவகாரமே இந்தக் கடத்தலுக்குக் காரணம் என்று ஆரம்பக் கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like