ஆலயம், பாடசாலை மீது தாக்குதல்!!

மன்னார் கீரிச்சுட்டான் பகுதியில் ஆலயம் மற்றும் பாடசாலை என்பன ஒரே நாளில் சேதமாக்கப்பட்டுள்ளன.

கீரிச்சுட்டான் கிறிஸ்துராசா ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த இரு சொருபங்கள் அகற்றப்பட்டு, பற்றைக்குள் வீசப்பட்டிருந்தன. அதனால் சொரூபத்தின் தலைப் பாகங்கள் உடைந்து காணப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள கீரிச்சுட்டான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் நுழைவாயில்
கதவு சேதமாக்கப்பட்டதுன், பாடசாலையில் இருந்த தளபாடங்கள், மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

You might also like