இடாய் புயலில் சிக்கி- 268 பேர் உயிரிழப்பு!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ராவை கடந்த மாதம் மணிக்கு 177 கிலோ மீற்றர் வேகத்தில் ‘இடாய் புயல்’ தாக்கியது. இதனால் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகளும், சுற்றுச்சுவர்களும் இடிந்து விழுந்தன.

இடாய் புயலின் கோரத்தாண்டவத்தால் மொசாம்பிக் நாட்டில் சுமார் 500 பேர் உயிரிழந்தனர். தெற்காப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டின் கிழக்கு பகுதியையும் இந்த கோரப்புயல் பதம் பார்த்தது.

புயலைத் தொடர்ந்து பெய்த கனமழையால் பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலைகளை வெள்ளநீர் அடித்துச் சென்று விட்டதால் நகரங்கள் எல்லாம் தீவு கூட்டங்களாக காட்சி அளிக்கின்றன.

மழை சார்ந்த விபத்துகளில் சிக்கி உயிரிழந்த பலரது சடலங்களைப் புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் சில இடங்களில் வெள்ளத்தில் சடலங்கள் அடித்துச் செல்லப்படுவதை காண முடிகிறது.

இடாய் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம் சார்ந்த விபத்துகளில் இதுவரை 268 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் மோனிகா முட்ஸ்வாங்வா தெரிவித்துள்ளார்.

You might also like