இந்­தி­யா­வைத் திண­ற­டிப்­போம்   ஸ்ரானிக்­ஸை­யின் ஆசை இது

இந்­தி­யா­வுக்கு எதி­ரான டெஸ்ட் ஆட்­டத்­தில் அந்த அணி­யைத் திண­ற­டிப்­போம் என்று தெரி­வித்­தார் ஆப்­கா­னிஸ்­தான் அணி­யின் தலை­வர் ஸ்ரானிக்ஸை. அண்­மை­யில் பன்­னாட்டு கிரிக் கெட் சபை ஆப்­கா­னிஸ்­தான் மற்­றும் அயர்­லாந்து அணிக­ளுக்கு டெஸ்ட் அந்­தஸ்­தைக் கொடுத்தது.

அயர்­லாந்து அணி தனது முத­லா­வது டெஸ்ட் ஆட்­டத்தை பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக விளை­ யா­டி­விட்­டது. ஆப்கா­னிஸ்­தான் அணியோ தனது முத­லா ­வது ஆட் டம் இந்­தி­யா­வுக்கு எதி­ரா­கத்­தான் அமைய வேண்­டும் என்று கோரிக்கை வைத்­தது.

இதை இந்­தி­யக் கிரிக்­கெட் கட்­டுப்­பாட்­டுச் சபை­யும் ஏற்­றுக்­கொண் டதை அடுத்து இரண்டு அணி­க­ளுக்­கும் இடை­யி­லான ஆட்­டம் அடுத்த மாதம் 14ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இந்­தி­யா­வின் பெங்­க­ளூ­ரில் இந்த ஆட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­திய அணியே ஆதிக்­கம் செலுத்­தும் என்று எதிர்­பார்க்­கை­யில் ஆப்­கா­னிஸ்­தான் தொடர்­பில் இவ்­வாறு நம்­பிக்கை தெரி­வித்­தார் ஸ்ரா னிக்ஸை. ‘‘ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு எதி­ரான இந்­திய அணி­யில் கோக்லி விளை­யா­ட­மாட்­டார் என்று தெரி­ய­வ­ரு­கி­றது. கோக்லி இருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும் இந்­திய அணி சிறந்த அணியே. உள்­நாட்­டில் இன்­னும் கூடு­தல் பலத்­து­டன் திக­ழக்­கூ­டி­யது அந்த அணி.

கோக்லி ஒரு மிகப்­பெ­ரிய வீரர். அவர் விளை­யா­டி­னால் இன்­றும் மகிழ்ச்­சி­யா­கவே இருக்­கும். யார் விளை­யா­டு­கி­றார்­கள், அல்­லது விளை­யா­ட­வில்லை என்­பதை மீறி இந்­திய அணி சவா­லான அணி என்­பது அனை­வ­ருக் கும் தெரிந்­ததே. நிச்­ச­யம் எங்­க­ளுக்கு இது கற்­றுக்­கொள்­ளும் அனு­ப­வம்­தான், ஆனா­லும் நாங்­கள் இந்­திய அணி­யைப் பார்த்து மிர­ள­வில்லை. நாங்­கள் வெற்­றி­பெ­றத்­தான் விளை­யா­டு­ கி­றோம்.

எங்­க­ளி­டம் உல­கத்­த­ரம் வாய்ந்த வீரர்­கள் உள்­ள­னர். அவர்­கள் இந்­தி­யா­வுக்கு சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­து­வர். நாங்­கள் இந்­திய வீரர்­க­ளி­ட­மி­ருந்து கற்­றுக்கொள்­வோம், அவர்­க­ளும் எங்­க­ளி­ட­மி­ருந்து கற்­றுக் கொள்­வார்­கள்’’ என ஸ்ரானிக்ஸை மேலும் தெரி­வித்­தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close