side Add

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – 82 பேர் உயிரிழப்பு!!

இந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 82 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. கடலுக்கு அடியில் 15 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையிலேயே இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

You might also like