இன்­றைய மோதல்­கள்!!

யாழ். லீக்­கின்
கால்­பந்­தாட்­டம்
யாழ்ப்­பா­ணம் கால்­பந்­தாட்ட லீக்­கின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு நடத்­தப்­பட்­டு­வ­ரும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் அரி­யாலை கால்­பந்­தாட்டப் பயிற்சி நிலைய மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்­தத் தொட­ரில் இன்று ஞாயிற்­றுக் கி­ழமை பிற்­ப­கல் 3.45 மணிக்கு இடம் ­பெ­றும் ஆட்­டத்­தில் ஒலிம்­பிக் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து முத்­த­மிழ் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

மாலை 4.45 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் நாவாந்­துறை சென். நீக்­கி­லஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து குரு­ந­கர் பாடும்­மீன் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

பாரதி வி.கழக
கால்­பந்­தாட்­டம்
பொலிகை பாரதி விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் பொலிகை பாரதி பிறீ­மி­யர் லீக் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் பொலிகை பாரதி விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் மின்­னொ­ளி­யில் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்­தத் தொட­ரில் இன்று ஞாயிற்­றுக் கி­ழமை இரவு 7 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் பொலிகை நோர்த் யுனைற்­ரெட் அணியை எதிர்த்து பொலிகை சீராஸ் அணி மோத­வுள்­ளது.

இரவு 7.40 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் பொலிகை பையர் ஹய்ஸ் அணியை எதிர்த்து பொலிகை யங்­பேர்­டஸ் அணி மோத­வுள்­ளது. இரவு 8.30 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் பொலிகை அற்­ராக் போய்ஸ் அணியை எதிர்த்து பொலிகை பிளக் புல்ஸ் அணி மோத­வுள்­ளது.

You might also like