“இருட்டு அறையில் முரட்டுக் குத்து“ – விமர்சிக்கப்பட்ட பிக் பாஸ் காயத்ரி!!

கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ”இருட்டு அறையில் முரட்டுக் குத்து” படத்தில் ”பிக் பாஸ்” காயத்ரியை கலாய்த்துள்ளார்கள்.

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, சந்திரிகா ரவி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்த ”இருட்டு அறையில் முரட்டுக் குத்து” படம் ஹிட்டாகியுள்ளது. அடல்ட் காமெடி படம் எடுத்தால் ஹிட்டாகும் என்று தெரிந்து தான் இந்த படத்தை தயாரித்துள்ளார் ஞானவேல்ராஜா.

பணம் சம்பாதிக்க இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டுமா என்று பிரபலங்கள் விமர்சிக்கிறார்கள். ஆனால் ரசிகர்களோ தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

மேலும், பிக் பாஸ் வீட்டில் நேரம், நாள் கூறுவது போன்றே இந்த படத்திலும் தெரிவித்துள்ளனர். காயத்ரியையும் கலாய்த்துள்ளனர்.

பேயை விரட்ட பங்களாவுக்கு வரும் மொட்டை ராஜேந்திரனும், பாலாவும் தங்கத்தை திருடிவிட்டு எவெளியேறத் திட்டமிடுவார்கள். அவர்கள் தங்கத்தை திருட முயற்சி செய்யும்போது திடீர் என்று திரும்பிப் பார்த்தால் அவர்கள் பின்னால் பேய் நிற்கும். பேயைப் பார்த்த ராஜேந்திரன் ”காயத்ரி டா..” என்பார். அதற்கு பாலாவோ ”காயத்ரி இதை விட கேவலமாக இருக்கும்..” என்பார்.

மொட்டை ராஜேந்திரனும், பாலாவும் கூறும் காயத்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காயத்ரி தான் என்று படத்தை பார்த்தவர்கள் கூறிச் சிரிக்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close