side Add

இரு கிராமங்கள் விரைவில் விடுவிப்பு!!

கிளிநொச்சி இந்திராபுரம் மற்றும் அம்பளவளைப் பகுதிகளில் ஒரு பகுதி காணிகள் மக்கிடம் கையளிக்கப்படவுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முகமாலை, இத்தாவில், இந்திராபுரம் போன்ற பகுதிகளில் மிக ஆபத்தை விளைவிக்கூடிய வெடிபொருள்கள் புதைக்கப்பட்டுள்ளன என்று கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திராபுரம், அம்பளவளை கிராமங்களில் வெடிபொருள்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையிலான குழுவினர், பொது அமைப்புக்களின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த பகுதிகளைப் பார்வையிட்டுள்ளனர்.

கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடினர்.

குறித்த கிராமங்களில் கண்ணிவெடிகள் விரைவாக அகற்றப்பட்டுள்ளன. ஒருபகுதி விரைவில் விடுவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like