இலங்கைக்கு வரும்- காஷ்மீர் கப்பல்!!

பாகிஸ்தானின் கடலோர பாதுகாப்பு கப்பல் நான்கு நாள்கள் பயணமாக இலங்கைக்கு வரவுள்ளது.

காஷ்மீர் என அழைக்கப்படும் குறித்த கப்பல் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருக்கும்.

பாகிஸ்தானின் கடலோர பாதுகாப்பு கப்பல் மூலம் இலங்கைக்கு வருகை தரவுள்ள அதிகாரிகள் இலங்கைக் கடற்படை அதிகாரிகளுடன் இணைந்து பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கையுடனான நல்லுறவை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவை மேம்படுத்தவும் இந்தப் பயணம் அமையும் என்று கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close