இலங்கைப் பெண்ணுக்கு இந்தியாவில் கிடைத்த அதிர்ஷ்டம்!!

இந்தியாவில், ஈரோடு மாவட்டத்தில் இலங்கைப் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 சிசுக்களைப் பிரசவித்துள்ளார்.

அரச்சலூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி கலாநி கர்ப்பமுற்று, தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். காலாநிக்கு ஸ்கேன் செய்த வைத்தியர்கள் 3 சிசுக்கள் இருப்பதாக கூறினர்.

பின்னர் அவருக்கு முதலில் ஒரு சிசு சுகப்பிரசவம் ஆனது. பின்னர், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது. அப்போது அடுத்தடுத்து 3 சிசுக்களை கலாநி பெற்றெடுத்தார்.

2 பெண் சிசுக்கள், 2 ஆண் சிசுக்கள் என 4 குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close