இலங்கையில் மனைவியைப் பறிகொடுத்தவரின் கதறல்!!

திருமணம் முடிந்து இலங்கைக்குத் தேனிலவு வந்தவர். மனைவியைப் படுகொடுத்தார்.

லண்டன் நகரைச் சேர்ந்தவர் கிளன் சந்தாரியா இந்திய வம்சாவளி பெண்ணான உஷிலா படேல் என்பவரை கடந்த மாதம் திருமணம் முடித்துள்ளார்.

குறித்த தம்பதி இரண்டு நாள் தேனிலவுப் பயணமாக இலங்கைக்கு வந்துள்ளனர்.

கொழும்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். அங்கு உணவருந்திய தம்பதியினர் இருவரும் அங்கேயே மயங்கி விழுந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதில் உஷிலா படேல் உயிரிழந்துள்ளார்.

உஷிலாவின் சடலப் பரிசோதனை அறிக்கையில், உடல் வறட்சி மற்றும் வாந்தியின் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவியின் இறப்புக்கு ஹோட்டலில் கொடுத்த உணவே காரணம் என்று சந்தாரியா குற்றம் சாட்டியுள்ளார்.

You might also like