இலங்கை , இந்தியா மீன்பிடித் தகராறுகள்- இழப்பீடு மற்றும் தீர்வு!!

இலங்­கை­யில் வட­மா­கா­ணத்­தின் பொரு­ளா­தா­ரம் 2010ஆம் ஆண்டு உள்­நாட்டு போர் நிறை­வ­டைந்த­ தைய­டுத்து மீண்­டும் புத்­து­யிர்­பெற ஆரம்­பித்­துள்­ளது. கிடைக்­கக் கூடிய மிகப் பிந்­திய தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில், 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்­டு­வரை நாட்­டின் ஒன்­பது மாகா­ணங்­க­ளுள் அதி­கூ­டிய மாகாண பொரு­ளா­தார வளர்ச்சி வீதத்தினை வட­மா­கா­ணம் பதி­வு­செய்­துள்­ளது. இருப்­பி­னும், பொரு­ளா­தா­ரத்­தின் துணைப்­பி­ரி­வு­க­ளில் ஒன்­றான மீன்­பி­டித்­து­றை­யா­னது, இலங்­கை­யின் வடக்­குக் கரை­யோ­ரத்­தில் (அதி­க­மாக யாழ்ப்­பா­ணம் மற்­றும் மன்­னார் மாவட்ட) இந்­திய (குறிப்­பாக தமிழ்­நாடு) மீன­வர்­க­ளின் சட்ட விரோத மீன்­பி­டி­யின் மூலம் பெரு­ம­ளவு பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கை மற்­றும் இந்­திய மீன­வர்­கள், மன்­னார் குடா, பாக்கு விரி­குடா, பாக்கு நீரி­ணைப் பகு­தி­க­ளி­லும் வேறு பகு­தி­க­ளி­லும் பாரம்­ப­ரிய மீன்­பிடி முறை­கள் மற்­றும் உப­க­ர­ணங்­க­ளைப் பயன்­ப­டுத்தி பன்­னெ­டுங் கால­மாக இணக்­க­மாக மீன்­பி­டித்து வந்­துள்­ள­னர். இருப்­பி­னும் தொழில்­நுட்ப முன்­னேற்­றங்­கள், (நவீன மீன்­பி­டிப் பட­கு­கள், பல நாள்­கள் கட­லில் தங்­கக் கூடி­ய­ப­ட­கு­கள், இழு­வலை மடி­கள், நவீன மீன் பிடி வலை­கள், இன்­ன­பிற கார­ண­மாக பாக்கு நீரி­ணை­யின் இந்­தி­யா­வுக்­குச் சொந்­த­மான கடற்­ப­கு­தி­யி­லும் வேறு பகு­தி­க­ளி­லும், கடல் வள­மா­னது சூறை­யா­டப்­ப­டு­வ­ தோடு சுரண்­டப்­பட்­டும் வரு­கின்­றது. 1983ஆம் ஆண்டு முதல் இலங்­கை­யில் நடை­பெற்ற உள்­நாட்டுப் போரா­லும், இலங்கை பாது­காப்­புப் படை­யி­ன­ரின் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளி­னா­லும் தடை­க­ளா­லும் மீன்­பி­டித்­து­றை­யின் இவ்­வா­றான தொழில்­நுட்ப முன்­னேற்­றங்­களை வட­ப­குதி மீனர்­வ­க­ளால் அனு­ப­விக்க முடி­யா­மல் போயிற்று.

அத­னால் மன்­னார் வளை­குடா, பாக்கு விரி­குடா, மற்­றும் பாக்­கு­நீ­ரிணை, என்­ப­ன­வற்­றின் இலங்­கைக்­கான பகு­தி­க­ளில் ஒப்­பீட்­ட­ள­வில் பெரிய எண்­ணிக்­கை­யி­லான கடல் வளம் உள்­ள­தால் இந்­திய மீன­வர்­கள் இலங்­கை­யின் கடற்­ப­ரப்­பில் அத்­து­மீறிய மீன்­பி­டி­யில் ஈடு­ப­டு­வ­தோடு, இழு­வ­லை­மடி மற்­றும் சோடி­யான இழு­வ­லை­மடி போன்­ற­வற்­றைப் பயன்­ப­டுத்தி சட்­ட­வி­ரோ­த­மான மற்­றும் நியா­ய­மற்ற மீன்­பிடி நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­னர். அவ்­வாறு சட்­ட­வி­ரோத மீன்­பி­டி­யில் ஈடு­ப­டு­வோ­ரின் எண்­ணிக்­கை­யா­னது அதி­க­ரித்­துச் செல்­வது, இதில் சம்­ப­ளத்­துக்­கா­கச் செயற்­ப­டும் மீன­வத்­தொ­ழி­லா­ளர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­ப­தையே காட்­டுகின்றது. பெரிய முத­லா­ளி­க­ளா­க­வி­ருக்­கும் இழு­வலை மடி­க­ளின் சொந்­தக்­கா­ரர்­க­ளால் வாட­கைக்கு இவர்­கள் அமர்த்­தப்­ப­டு­கின்­ற­னர்.

அத்­து­டன் இவர்­கள் தமிழ்­நாட்­டின் பாரம்­ப­ரி­ய­மான மீன்­ப­டிச் சமூ­கத்­தைச் சேரந்­த­வர்­க­ளும் அல்­லர். எனவே பாக்கு நீரி­ணை­யில் அத்­து­மீறி ஊடு­ரு­வும் சர்ச்­சை­க­ளா­னவை, தமிழ்­நாட்டு ஊட­கங்­க­ளால் சித்­த­ரிக்­கப்­ப­டு­ வ­து­போல இலங்­கை­யின் வடக்­குப்­புற மீன­வர்­க­ளுக்­கும், தமிழ்­நாட்டு மீன­வர்­க­ ளுக்­கும் இடை­யி­லான வாழ்­வா­தா­ரப் போட்­டி­யல்ல, மாறாக, சட்­ட­வி­ரோ­த­மான, பதி­வு­செய்­யப்­ப­டாத, கண்­கா­ணிக்­கப்­ப­ப­டாத மீன்­பிடி நட­வ­டிக்­கை­களே ஆகும். தமிழ்­நாட்­டின் இழு­வலை மடிச் சொந்­தக்­கா­ரர்­க­ளின் பன்­னாட்டு ரீதி­யா­கத் தடை­செய்­யப்­பட்ட நட­வ­டிக்­கை­யா­கவே இது கொள்­ளப்­பட வேண்­டும்.

மன்­னார் வளை­குடா, பாக்கு விரி­குடா, மற்­றும் பாக்கு நீரிணை, என்­ப­ன­வற்­றைச் சூழ­வுள்ள பகு­தி­களே கடல்­வ­ளம் கொழிக்­கும் பகு­தி­க­ளா­கக் கரு­தப்­ப­டு­கின்­றன. அதற்கு முதன்­மை­யான கார­ணம் அந்­தப் பகு­தி­க­ளில் உள்ள பெரிய கண்­டத்­தட்டே. அதன் சரா­சரி ஆழம், வெறும் மூன்று மீற்­றர்­களே. இது இந்­திய கடல் பகு­தி­வரை செல்­கின்­றது. மன்­னார் வளை­குடா, பாக்கு விரி­குடா மற்­றும் பாக்கு நீரிணை என்­ப­ன­வற்­றின் சேற்­றுத்­தன்­மை­யான அடிப்­ப­கு­தி­யால், பாக்கு விரி­குடா, மற்­றும் பாக்கு நீரிணை என்­பன உயர்­தர இறால் இனங்­க­ளுக்­கான வாழி­டங்­க­ளா­க­வுள்­ளன. இந்­தப் பகு­தி­க­ளின் ஆழம் குறைந்த கட­லின் அடிப்­ப­கு­தி­கள், தனித்­து­வ­மான, அசை­வற்ற கடல் அடி­மட்ட உயி­ரி­னங்­களை அதி­க­ள­வில் கொண்­டி­ருக்­கின்­றன.

இந்­தக் கொள்­கைப் பத்­தி­ரி­கை­யின் இலக்­கு­க­ளில் முத­லா­வது இந்­தி­யா­வுக்­கும் இலங்­கைக்­கும் இடை­யி­லான மீன்­பி­டிப் தக­ரா­று­க­ளி­னால் நாட்­டுக்கு (இலங்­கைக்கு) ஏற்­ப­டும் பண மற்­றும் வாழ்­வா­தார இழப்­பு­கள் மற்­றும் இத­னால் நேர­டி­யா­கப் பாதிக்­கப்­ப­டும் மக்­கள் பற்­றிய தக­வ­ல­ளிக்­கப்­பட்ட மதிப்­பீட்­டைப் பெறு­வ­தா­கும். இரண்­டா­வது, இந்த நீண்­ட­கா­லப் பிரச்­சி­னைக்கு, அர­சி­யல் தீர்­வொன்று காணப்­படா நிலை­யி­லும் செயற்­றி­ற­றன் மிக்க சட்ட அமு­லாக்­கல் நடை­மு­றை­கள் இல்­லா­மை­யா­லும், விஞ்­ஞான அல்­லது தொழில்­நுட்ப ரீதி­யான தீர்­வு­களை நாடு­த­லா­கும்.

மேலே குறிப்­பி­டப்­பட்ட குறிக்­கோள்­கள், இந்­தியா மற்­றும் இலங்கை கொள்கை வகுப்பு சமூ­கத்தை இலக்கு வைக்­கப்­பட்டு ஏனைய ஆராச்­சி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­பட்ட இரண்­டாம் நிலைத்­த­ர­ வு­கள் மற்­றும் அறிவு, என்­ப­ன­வற்­றால் நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றன. அதுவே இவ்­வாய்­வுக்­கான அடிப்­ப­டை­யா­கின்­றது. மேலும் இந்­தப் பிரச்­சி­னை­யு­டன் தொடர்­பு­பட்ட மீன்­பி­டிச் சமூ­கத்தை, ஏற்­க­னவே தெரி­யப்­பட்ட விஞ்­ஞான மற்­றும் தொழில்­நுட்­பத் தீர்­வு­க­ளில் கவ­னத்­தைச் செலுத்­தி­ய­வாறு கிடைக்­கக்­கூ­டிய மாற்று சர்ச்சை தீர்ப்பு பொறி­மு­றை­களை நோக்கி செல்­லக்­கூ­டிய கூரு­ணர்வு கொண்­ட­வர்­க­ளாக மாற்­று­தல் பிறி­தொரு நோக்­க­மா­கும்.

இலங்­கை­யின் வட­மா­கா­ணத்­தில்
போரின் பின்­ன­ரான மீன்­பி­டி­பாடு
கிடைக்­கக்­கூ­டிய ஆகப்­பிந்­திய தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில், 2015 ஆம் ஆண்­டில் 48 ஆயி­ரத்து 380 செயற்­ப­டு­நிலை மீன­வர்­கள் வட­மா­கா­ணத்­தில் இருந்­தார்­கள். இது நாட்­டின் ஒட்­டு­மொத்த மீன­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யோடு ஒப்­பி­டு­கை­யில் 22 சத­வீ­த­மா­கும். அதா­வது 2 லட்­சத்து 21 ஆயி­ரத்து 560 பேரில் இது 48 ஆயி­ரத்து 380 பேர் என்­ற­வா­றாக அமை­கி­றது. இந்த எண்­ணிக்­கை­யில் அரை­வா­சி­யி­னர் யாழ் மாவட்­டத்தை பிர­தி­நித்­து­வப்­ப­டுத்த (23 ஆயி­ரத்து 480 பேர் அல்­லது 49 வீதம்), மன்­னார் மாவட்­டம் இரண்­டாம் இடத்­தைப் பிடித்­த­தது. (17 ஆயி­ரத்து 540 பேர் அல்­லது 36 வீதம்). வட மாகா­ணத்­தில் இந்­தச் சமூ­கத்­தைச் சேர்ந்த சுமார் ஒரு லட்­சத்து 83 ஆயி­ரத்து 480 பேர் வாழ்­கின்­ற­னர். இவர்­க­ளில் 54 சத­வி­த­ மானோர், (98 ஆயி­ரத்து 230 பேர்) யாழ்ப்­பாண மாவட்­டத்­தி­லும், மன்­னார் மாவட்­டத்­தில் 32 சத­வீ­தம் பேரும் (59 ஆயி­ரத்து 530 பேர்) உள்­ள­னர். மன்­னார் மாவட்­டத்­தின் மொத்த சனத்­தொ­கை­யில் மீன்­பி­டிச் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் 50 சத­வீ­தத்தின­ரா­வர். இது யாழ்ப்­பா­ணத்­தில் ஒப்­பீட்­ட­ள­வில் மிகக் குறை­வாக உள்­ளது.

ஏனெ­னில் யாழப்­பா­ணத்­தின் சனத்­தொகை மன்­னா­ரி­னது சனத்­தொ­கை­யில் ஆறு மடங்கு பெய­ரி­தா­கும்.உள்­நாட்­டுப் போர் முடி­வ­டைந்த பின்­னர், 2010ஆம் ஆண்­டுக்­கும் 2015ஆம் ஆண்­டுக்­கும் இடை­யில் வட மாகா­ணத்­தின் மொத்த ‘மீன்­பி­டி­யா­னது’ இரட்­டிப்­பா­கி­யுள்­ளது. (116 சத­வீத அதி­க­ரிப்பு) இருப்­பி­னும் வட மாகா­ணத்­தின் ஒட்­ட­மொத்த மீன்­பி­டி­யா­னது, 88 ஆயி­ரத்து 452 மெட்­றிக்­தொன் மீன்­கள் பிடிக்­கப்­பட்ட 1980ஆம் ஆண்­டுக் காலப்­ப­கு­திக்கு இன்­ன­மும் திரும்­ப­ வில்லை. 1980ஆம் ஆண்­டில் நாட்­டின் மொத்த மீன்­ப­டி­யில் வட மாகா­ண­மா­னது 47 சத­வீத பங்­க­ளிப்­பினை செய்­தி­ருந்­தது.

2015ஆம் ஆண்­ட­ள­வில் இது வெறு­மனே 16 சத­வீ­த­மா­கவே இருந்­தது.
வட­ப­கு­தி­யில் உள்­நாட்­டுப் போர் முடி­வ­டைந்த பின்­னர், மீன்­பி­டி­யின் வளர்ச்­சி­யா­னது நேரா­ன­தாக இருந்­தது இல்லை. உதா­ர­ணத்­துக்கு:

•மீன்­பி­டி­யில் யாழ். மாவட்­ட­மா­னது குறிப்­பி­ டத்­தக்­க­ள­ வி­லான (34 %) வீழ்ச்­சி­யினை, 2012ஆம் ஆண்­டி­லும், (32 ஆயி­ரத்து 400 மெட்­றிக் தொன்) 2013ஆம் ஆண்­டி­லும் (21 ஆயி­ரத்து 380 மெட்­றிக்­தொன்) கண்­டது.

•இத­னைப்­போ­லவே, கிளி­நொச்சி மாவட்­டத்­தின் மீன்­பி­டி­யா­னது, 2014ஆம் ஆண்­டுக்­கும் (15 ஆயி­ரத்து 780 மெட்­றிக்­தொன்) 2015ஆம் ஆண்­டுக்­கு­மி­டை­யில் (13 ஆயி­ரத்து 800) 13 சத­வீ­தத்­தி­னால் வீழச்­சி­ய­டைந்­தது.

•மன்­னா­ரின் மீன்­பி­டி­யா­னது, 2012ஆம் ஆண்­டுக்­கும் (13 ஆயி­ரத்து 450 மெட்­றிக்­தொன்) 2013ஆம் ஆண்­டுக்­கும் இடை­யில் (11 ஆயி­ரத்து 110 மெட்­றிக்­தொன்) 17 சத­வீ­தத்­தி­னா­லும் 2014ஆம் ஆண்­டுக்­கும் (22 ஆயி­ரத்து 130 மெட்­றிக்­தொன்) 2015ஆம் ஆண்­டுக்­கு­மி­டை­யில் (19 ஆயி­ரத்து 390 மெட்­றிக்­தொன்) 12 சத­வீ­தத்­தா­லும் குறை­வ­டைந்­தது.

•மன்­னா­ரின் மீன்­பி­டி­யா­னது, 2012ஆம் ஆண்­டுக்­கும் (13 ஆயி­ரத்து 450 மெட்­றிக்­தொன்) 2013ஆம் ஆண்­டுக்­கு­மி­டையே (11 ஆயி­ரத்து 110 மெட்­றிக்­தொன்) மேலும் 17 சத­வீ­தத்­தா­லும், 2014ஆம் ஆண்­டுக்­கும் (22 ஆயி­ரத்து 130 மெட்­றிக்­தொன்) 2015ஆம் ஆண்­டுக்­கு­மி­டை­யில் (19 ஆயி­ரத்து 390 மெட்­றிக்­தொன்) மேலும் 12 சத­வீ­தத்­தி­னா­லும் குறை­வ­டைந்­தது. யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி மற்­றும் மன்­னார் மாவட்­டங்­க­ளில் மீன்­பி­டி­யா­னது நேரான வளர்ச்­சி­யைக் காண்­பிக்­கா­மைக்­கான சாத்­தி­ய­மான கார­ண­மாக நம்­பப்­ப­டு­வது, இந்­திய இழு­வை­வலை மடி­க­ளால் மேற்­கொள்­ளப்­ப­டும் மீன்­வள அப­க­ரிப்­பின் அதி­க­ரிப்­பா­கும். மீன்­பி­டி­யில் ஏற்­பட்ட இந்த ஏற்­ற­இ­றக்­கங்­க­ளுக்கு, இலங்­கை­யில் உள்­நாட்டு போருக்­குப் பிந்­திய காலப்­ப­கு­தி­யில் வட மாகாண மீன­வர்­கள் மீதும் மீன்­பி­டித்­துறை மீதும் விதிக்­கப்­பட்ட பிராந்­தி­யம் கடந்த தடை­கள் கார­ண­மா­கக் கொள்­ளப்­ப­ட­லாம்.

2010ஆம் ஆண்­டில் இலங்­கை­யின் தேசிய பொரு­ளா­தா­ரத்­தில் மீன்­பிடி துணைத் துறை­யா­னது 1.7 வீத பங்­க­ளிப்பை மாத்­தி­ரமே செய்­தி­ருந்­தது. இது

2015ஆம் ஆண்­டில் 1.4 வீத­மா­க­ வி­ருந்­தது. மாறாக, இந்த மீன்­பிடி துணைத் துறை­யா­னது 2010ஆம் ஆண்­டில் வட மாகா­ண­ச­பைப் பொரு­ளா­தா­ரத்­தில் 3.7 சத­வீத பங்­க­ளிப்­பி­னைச் செய்­தி­ருந்­தது. இது 2015ஆம் ஆண்­டில் 5.6 சத­வீத சாத­க­மான அதி­க­ரிப்­பினை காட்­டி­யது (மாகாண உள்­நாட்டு உற்­பத்தி புள்­ளி­வி­ப­ரங்­கள கிடைக்­கக்­கூ­டிய மிகப் பிந்­திய காலப்­ப­குதி இது­வா­கும்) சட்­ட­வி­ரோ­த­மாக அந்­தப் பகுதி மீன்­வ­ளம் அப­க­ரிக்­கப்­ப­டா­விட்­டி­ருந்­தால் மீன்­பிடி துணைத்­து­றை ­யின் வட­மா­கா­ணத்­துக்­கான பங்­க­ளிப்­பா­னது இதை­வி­டக் கூடு­த­லாக இருந்­தி­ருக்­கும்

இலங்­கை­யின் வட­மா­கா­ணத்­தில்
மீன்­பி­டித்­து­றை­யின் அபி­வி­ருத்தி
இந்­திய இழு­வலை மடி­க­ளால் வட பகுதி மீன­வர்­க­ளுக்­கேற்­பட்ட பொரு­ளா­தார மற்­றும் வாழ்­வா­தார இழப்­பா­னது, கணிப்­ப­தற்­குக் கடி­ன­மான விட­ய­மா­கும். வெவ்வேறு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான கடல் எல்­லை­க­ளுக்கு மீன்­கள் கட்­டுப்­பட்­ட­வை­யல்ல. மேலும் இலங்­கை­யின் கடல் எல்­லைக்­குள் அத்­து­மீறி உட்­பு­கும் இழு­வலை மடி­க­ளின் எண்­ணிக்­கையை நாளாந்­தம் கணக்­கி­டு­வ­தும் சாத்­தி­மற்­றது. இது நாளுக்­கு­நான் வேறு­ப­டும். அத்­து­டன் அவ்­வாறு அத்­து­மி­றிப் பிர­வே­சிப்­போ­ரால் பிடிக்­கப்­ப­டும் மீன்­க­ளின் வகை­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தும் சாத்­தி­ய­மற்­றது. மேல­தி­க­மாக ஒவ்­வொரு வகை மீனி­ன­தும் சில்­லறை மற்­றும் மொத்த விலை என்­பன தொடர்ச்­சி­யாக மாறிய வண்­ணமே காணப்­ப­டு­வ­தால், அத்­து­மீ­றிய மீன்­ப­டித்­த­லி­னால் ஏற்­ப­டும் பொரு­ளா­தார மற்­றும் வாழ்­வா­தார இழப்­பினை அறி­வ­தற்கு பொருத்­த­மான பெறு­மா­னங்­களை பயன்­ப­டுத்­து­வ­தென்­பது சாத்­தி­ய­மற்­றது.

அத்­து­மீ­றிய மீன்­பி­டித்­த­லால் இன்­றைக்கு ஏற்­ப­டும் இழப்­பு­க­ளுக்கு மேதி­க­மாக, கட­லடி மீன்­பி­டிப்­பால், எதிர்­கால மீன்­வ­ளம் இல்­லா­மல் செய்­யப்­ப­டு­வ­த­னால் எதிர்­கால வரு­மா­னத்­தை­யும் இழக்க நேர்­கின்­றது. இழு­வலை மடி­கள் கட­லின் அடிப்­ப­கு­தியை வாரி அள்­ளிச் செல்­வ­த­னால் அப்­ப­கு­தி­யல் பாரி­ய­ள­வில் காணப்­ப­டும் வளர்ந்து வரும் மீனி­னங்­கள் (தவ­று­த­லான மீன்­பிடி) அதி­க­ள­வில் பிடிக்­கப்­ப­டு­ கின்­றன. இவற்­றினை சந்­தை­யில் விற்க முடி­யாது. இழு­வ­லை­க­ளால் பிடிக்­கப்­ப­டும் 75 சத­வீ­த­மான மீன்­க­ளும் அவற்­றின் எச்­சங்­க­ளும் (தவ­று­த­லான மீன்­பிடி) சந்­தைப்­ப­டுத்­தப்­ப­டக் கூடி­யவை அல்ல என்­பது ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இவ்­வி­ழு­வலை மடி­கள், இலங்கை மீன­வர்­க­ ளின் மீன்­வ­லை­க­ளை­யும் சேத­ம­டை­யவோ அல்­லது அழிக்­கவோ செய்­கின்­றன.

இத­னால் இந்­திய மீன­வர்கள் அத்­து­மீறி நுழை­வ­தாக எதிர்­பா­ர்க்­கப்­ப­டும் நாள்­க­ளில் இலங்கை மீன­வர்­கள் தாம் மின்­பி­டிக்­குச் செல்­வ­த­னைத் தவிர்க்­கின்­ற­னர். இத­னால் வாழ­வா­தா­ரத்தை தேடு­வ­தற்­கான வாய்ப்­பொன்றை அவர்­கள் இழக்­கின்­ற­னர்.

வட­மா­காண மீன்­பி­டிச் சமூ­கங்­க­ளின் நேர­டி­யான வரு­மான இழப்­பு­குக்கு மேல­தி­க­மாக, மீன்­பிடி துணைத் துறை­யின் ஒட்­டு­மொத்த விநி­யோ­கச் சங்­கி­லி­யி­லும் நேர­டி­யற்ற இழப்­பு­கள் ஏற்­ப­டு­கின்­றன. இது புதிய மீன்­கள் மற்­றும்; பெறு­மதி சேர் மீன்­க­ளின் (உலர்த்­தல், தக­ரத்­தில் அடைத்­தல், இன்­ன­பிற) மொத்த விற்­ப­னை­யா­ளர்­கள், சில்­லறை விற்­ப­னை­யா­ ளர்­கள் மற்­றும் ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் என்ற வகை­யில் பாதிப்­பினை ஏற்­ப­டுத்­தும்.
கடந்த தசாப்­தத்­தில் டச்சு, இந்­திய மற்­றும் இலங்கை மீன்­பி­டித்­துறை நிபு­ணர்கள், ஆய்­வா­ளர்­க­ளால் அத்­து­மீ­றிய மீன்­பி­டி­ யால் ஏற்­பட்ட பொரு­ளா­தார இழப்­பின் பெறு­மதி பற்­றிய சில மதிப்­பீ­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இந்த மதிப்­ப­டு­கள் வெறு­மனே ஊடாக மற்­றும் குறி­காட்­டல் மதிப்­பீ­டு­க­ளே­யா­கும்.

ஒரு சில ஊகத்­தின் அடிப்­ப­டை­யி­லான எடு­கோள்­கள் ஒப்­பீட்­ட­ள­வில் ஏனை­ய­வற்­றி­லும் பார்க்க சிறந்­த­வை­யாக இருந்­தன. ஆய்­வா­ளர் ஒஸ்­கார் அம­ர­சிங்க ஒழுங்­க­மைக்­கப்­பட்ட இழப்பு மதிப்­பீட்­டினை, மூன்று வரு­ட­கா­லப்­ப­கு­திக்கு (2006–-2008) ‘சூழ்­நி­லைப் பகுப்­பாய்வு’ மற்­றும் ‘உணர்­தி­றன் பகுப்­பாய்வு’ என்­ப­ன­வற்­றின் மூலம் மேற்­கொண்­டுள்­ளார். ஐந்து வேறு­பட்ட நிபு­ணர்­கள் ஆய்­வா­ளர்­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட மதிப்­பீ­டு­க­ளின் பிர­கா­ரம் வரு­ட­மொன்­றுக்கு ஆகக்­கு­றைந்­தது 16 மில்­லி­யன் டொலர்­க­ளும் ஆகக்­கூ­டி­ய­தாக 56 மில்­லி­யன் டொலர்­க­ளும் இழப்பு ஏற்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. இந்த இரண்டு அதி­தீ­விர எதிர்­வு­கூ­றல்­கள் ஆச்­ச­ரி­யப் படத்­தக்­க­வ­கை­யில் தமிழ்­நாட்­டைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­க­ளால் முன்­வைக்­கப்­ப ட்­டவை ஆகும். இவை­யி­ரண்­டுக்­கும் இடைப்­பட்ட எடு­கோள்­கள் டச்சு மற்­றும் இலங்கை ஆய்­வா­ளர்­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்­டவை. இந்த ஐந்து வெவ்வேறு­பட்ட எதிர்­வு­கூ­றல்­க­ளுக்கு மிடை­யே­யான சரா­ச­ரி­யா­னது, 41 மில்­லி­யன் டொலர் அல்­லது 5 ஆயி­ரத்து 293 மில்­லி­யன் இலங்கை ரூபாக்­க­ளா­கும்.

இதற்­க­மைய வட மாகா­ணத்­தின் மீன்­பி­டிக் குடும்­ப­மொன்­றின் ஒவ்­வோர் அங்­கத்­த­வ­ரி­ன­தும் வரு­டாந்த நேர­டி­யான வரு­மான இழப்பு 28 ஆயி­ரத்து 848 ரூபா­வா­கும். இது அத்­து­மீ­றிய மீன்­பி­டி­யால் வரு­டாந்­தம் ஏற்­ப­டும் இழப்­பினை (5 ஆயி­ரத்து 293 மில்­லி­யன் ரூபா) ஒட்டுமொத்த மீன­வக் குடும்­பங்­க­ளின் எண்­ணிக்­கை­யால் வகுக்­கக் கிடைப்­பது. மேல­தி­க­மாக 2015ஆம் ஆண்­டில் அத்­து­மீ­றிய மீன்­பி­டி­யால் வரு­டாந்­தம் ஏற்­ப­டும் வரு­மான இழப்­பா­னது, வட மாகா­ணத்­தின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியி;ல் 1.4 சத­வீத்­துக்கு சம­னா­ன­தாக இருந்­தது.

பெறு­மதி சேர்­வை­கள் தொடர்­பான நேர­டி­யற்ற இழப்­பு­க­ளா­னவை, (பதப்­ப­டுத்­தல், தக­ரத்­தில் அடைத்­தல், உலர்த்­தல். இன்­ன­பிற) மொத்த மற்­றும் சில்­லறை விலை அதி­க­ரிப்­பு­கள், மற்­றும் இந்­திய இழு­வலை மடி­க­ளின் அத்­து­மி­றிய மீன்­பி­டி­ யால் கட­லு­ணவு ஏற்­று­ம­தி­யில் இழப்­பு­கள், என்­பவை கட்­டு­ரை­யா­ள­ரால் 50 சத­வீத நேரடி இழப்­பு­க­ளா­கப் பதி­யப்­பட்­டுள்­ளன. எனவே நேர­டி­யற்ற இழப்­பா­னது, 20.5 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­க­ ளாக, அல்­லது 2 ஆயி­ரத்து 646 மில்­லி­யன் இலங்கை ரூபாய்­க­ளா­கப் பதி­யப்­பட்­டுள்­ளன. இந்­திய இழு­வலை மடி­க­ளால் எற்­ப­டும் வரு­டாந்த நேர­டி­யான மற்­றும் நேர­டி­யற்ற இழப்­பு­க­ளா­னவை (7 ஆயி­ரத்து 939.5 மில்­லி­யன் இலங்கை ரூபா. அல்­லது 61.5 மில்­லி­யன அமெ­ரிக்க டொலர்), 2015 ஆம் ஆண்­டில் வட­மா­கா­ணத்­தின் மொத்த உற்­பத்­தி­யில் 2.0 சத­வீ­த­மாக இருந்­தது.
தொடரும்)

You might also like