side Add

உடல் எடையைக் குறைக்கும் சூப்!!

தேவையானவை

முட்டைக்கோஸ் – 200 கிராம்
கரட் – 1
வெங்காயம் – 2
சோள மா – அரைத்தேக்கரண்டி
மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை :

முட்டைகோஸ், கரட், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

சோள மாவில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்து கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளான முட்டைக்கோஸ், கரட் மற்றும் வெங்காயம் சேர்த்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், குக்கரில் உள்ளவற்றை சட்டியில் ஊற்றி, ] மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின் கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றிக் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான முட்டைக்கோஸ் – மிளகு சூப் தயார்.

You might also like