உருத்திரபுரம் அணிக்கு – கால்பந்தாாட்டத்தில் கிண்ணம்!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழக்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில், கால்பந்தாட்ட தொடரில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழக அணி கிண்ணம் வென்றது.

உருத்திரபுரம் விளையாடுக்கழக மைதானத்தில் இறுதியாட்டம் நேற்று இடம்பெற்றது.

உருத்திரபுரம் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து, கனகபுரம் விளையாட்டுக்கழக அணி மோதியது.

எதுவித கோல் பதிவின்றி முதல் பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்ததது.

இரண்டாவது பாதி ஆட்டத்தின் 38 நிமிடத்தில் கனகபுரம் விளையாட்டுக்கழக அணியின் முதலாவது கோலினை டிலக்ஸன் பதிவு செய்து தமது கோல் கணக்கினை ஆரம்பித்தார்.

பதிலுக்கு ஆட்டத்தின் 44 நிமிடத்தில உருத்திரபுரம் விளையாட்டுக்கழக அணியின் முதலாவது கோலினை பத்மகுமாரின் பதிவு செய்து ஆட்டத்தினை சமப்படுத்தினார்.

இதன் போது ஆட்டத்தின் 58 வது நிமிடத்தில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழக அணிக்கு தண்டனை உதை கிடைந்தது.

அதனை கரிஸ் கோலாக பதிவு செய்ய ஆட்ட நேர நிறைவில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழக அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

You might also like