எதிரெதிரே வந்த தொடருந்துகள் மயிரிழையில் தடுக்கப்பட்டது விபத்து!

இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி இடம்பெறவிருந்த விபத்து ஒன்று மயிரிழையில் தடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் பம்பலப்பிட்டி – வெள்ளவத்தை தொடருந்து நிலையங்களுக்கு அருகில் நேற்றுக் காலை இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த தொடருந்தும், காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்துமே ஒரே பாதையில் பயணித்துள்ளமையினால், இரு தொடருந்துகளும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதற்கான சந்தர்பம் ஏற்பட்டது.

எனினும் தொடருந்து ஊழியர்கள் அவசரமாகச் செயற்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like