side Add

ஏமாற்­றுப் பேர்­வ­ழி­கள் குறித்து -அவ­தா­ன­மாய் இருப்­போம்!!

சில­நாள்­க­ளுக்கு முன்­னர் வலி­கா­மம் பகு­திக்­குட்­பட்ட பிர­தே­ச­ச­பை­யொன்­றின் உறுப்­பி­னர் ஒரு­வ­ரால் குடா­நாட்­டில் பழைய இரும்பு, பழைய பொருள்­கள் வியா­பா­ரம் செய்­வோர் பிர­தேச, நக­ர­ச­பை­க­ளி­டம் தம்­மைப் பதிவு செய்து அனு­ம­தி­பெற வேண்­டும் எனக் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னம், குறித்த சபை­யில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இது உண்­மை­யில் பாராட்­டப்­பட வேண்­டிய, மக்­கள் நல­னில் அக்­க­றை­யுள்ள ஒரு­வ­ரின் சிந்­த­னை­யில் எழுத்து கருத்­தின் செயல்­வ­டி­வம். இதனை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் ஊர்­கா­வற்­றுறை பகு­தி­யில் பழைய இரும்பு வியா­பா­ரி­யொ­ரு­வர் நீரி­றைக்­கும் இயந்­தி­ர­மொன்­றைத் திரு­டி­ய­போது அப்­ப­குதி பிர­தேச சபை உறுப்­பி­ன­ரால் இனங்­கா­ணப்­பட்டு பிடிக்­கப்­பட்ட செய்தி பத்­தி­ரி­கை­க­ளில் வௌியா­கி­யி­ருந்­தது.

இரும்பு வியா­பா­ரி­கள் மட்­டு­மல்­லாது, சிறு வியா­பா­ரி­கள் மற்­றும் பல நட­மா­டும் வியா­பா­ரி­க­ளால் பொது­மக்­க­ளுக்­குப் பல­வித தொல்­லை­கள் ஏற்­ப­டு­கின்­றன. வீடு­களை விட்டு அய­லில் கோவி­லுக்கோ, உற­வி­னர் வீடு­க­ளுக்கோ செல்­வது கூடப் பாது­காப்­பற்­றது என்ற நிலை ஏற்­ப­டு­கி­றது. எல்­லோ­ரு­மல்ல ஒரு சில­ரது செயற்பாடுகளால் ஏற்­ப­டும் இத்­த­கைய அச்­சத்தால் சக­ல­ரை­யும் அச்­சத்­து­ட­னும், சந்­தே­கத்­து­டன் நோக்க வேண்டி உள்ளது..

ஒரு உதா­ர­ண­மாக சில மாதங்­க­ளுக்கு முன்­னர் ஒலி­பெ­ருக்கி பூட்டி வாக­னத்­தில் இரும்பு, தக­ரம், பழைய கொப்பி வாங்­கப்­ப­டும் என அறி­வித்து வந்த வாக­னத்தை வீதி­யில் நிறுத்தி ‘‘பழைய போத்­தல்­கள் நெஸ்­ரோ­மோல்ட் ரின்­கள், கொப்­பி­கள் இருக்­கின்­றன, எடுப்­பீர்­களா?’’ எனக் கேட்­டேன். அவர்­க­ளும் ஆம் என்­று­கூறி வீட்­டி­னுள் வர– இங்­கேயே இருங்­கள் எடுத்து வரு­கி­றேன் எனக்­கூறி பின்­பக்­கம் நான் சென்­ற­போது அவர்­க­ளும் என்­னைப் பின்­தொ­டர்ந்து வீட்­டின் பின்­பு­றம் வந்­தார்­கள்.

குறித்த பழைய பொருள்­களை எடுத்­துக்காட்டியதும் நான் கொடுத்த எந்­தப் பொரு­ளும் சரி­வ­ராது என கூறி­விட்டு. காணி­யில் காணப்­பட்ட வாளிக்­கம்­பி­கள் இரண்­டை­யும், சில துண்டு இரும்­பு­க­ளை­யும் அவர்­களே எடுத்­துக்­கொண்டு பண­மும் தராது சென்­றார்­கள். சரி ஓரிரு இரும்­பு­கள் தானே என்று விட்­டு­விட்­டேன். ஆனால் அவர்­க­ளின் ‘‘எல்­லாம் எடுப்­போம்’’ என்ற முதற்­பேச்சு மற்­ற­வர்­களை ஏமாற்­று­வ­தா­கவே பட்­டது.

இதை எப்­படி கரு­து­வது எனப் புரி­ய­வில்லை. எப்­ப­டியோ கிரா­மங்­க­ளில் குடி­யி­ருப்பு குறைந்த இடங்­க­ளில் இவ்­வா­றான வியா­பா­ரி­கள் தமது விப­ரங்­க­ளை உள்ளூராட்சிச் சபைகளில் பதிவுசெய்து அனு­மதி பெறாமல் இவ்விதம் பொருள்களைப் பெற்று வரு­வது பொருத்­த­மா­ன­தா­கப்­ப­ட­வில்லை.

நா.துஷாந்,வரணி

You might also like
X