side Add

ஏமாற்றத்தின் விளிம்பில் ஈழத் தமிழ் மக்கள்

தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காணா­மல் தொடர்ந்து இழுத்­த­டிப்­ப­தால் நாட்­டின் ஒரு­மைப்­பாட்­டுக்குக் குந்­த­கம் ஏற்­பட்­டு­ வி­டு­ம் என்­பதை ஆட்­சி­யா­ளர்­க­ளும் தென்­ப­குதி அர­சி­யல்­வா­தி­க­ளும் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜயம்­பதி விக்­கி­ர­ ம­ரட்ண இதை உணர்த்­தும் வகை­யி­லேயே அரச தலை­வ­ருக்­கும், தலைமை அமைச்­ச­ருக்­கும் எச்­ச­ரிக்கை கலந்த வேண்­டு­கோள் ஒன்றை விடுத்­துள்ளார். அர­ச­மைப்பு உரு­வாக்­கம் மற்­றும் ஏனைய விட­யங்­க­ ளில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாத தலை­வர்­க­ளாக இவர்­கள் இரு­வ­ரும் மாறி­வி­டக்­கூ­டாது என­வும் அவர் தெரி­வித்துள்ளார்.

பிரச்­சி­னை­கள் சூழ்ந்த நிலை­யில் நகர்கிறது தமி­ழர்­க­ளின் வாழ்வு

மேலோட்­ட­மா­கப் பார்க்­கும்­போது, தமிழ் மக்­கள் பிரச்­சி­னை­கள் எது­வு­மின்றி வாழ்­வது போன்­ற­தொரு தோற்­றம் வெளித் தெரிந்­தா­லும், உண்மை நிலை அது­வல்ல என்­பதை அனை­வ­ரும் புரிந்­து­ கொள்ள வேண்­டும். ஏரா­ள­மான பிரச்­சி­னை­ க­ளுக்கு முகம்கொடுத்த வண்­ணம் தமிழர்கள் தமது காலத்­தைக் கடத்தி வரு­கின்­ற­னர்.

இவற்­றுள் இனப்­பி­ரச்­சினை முக்­கி­ய­ மா­ன­தா­கும். இதற்­குத் தீர்வு காணா­த­தன் கார­ண­மா­கவே இன­மோ­தல்­கள் அடிக்­கடி ஏற்­பட்­ட­தோடு நீண்ட போர் ஒன்­றும் இடம்­பெற்­றது. இவை மீண்­டும் இடம்­பெ­றா­மல் பார்த்­துக் கொள்­வது ஆட்­சி­யா­ளர்­க­ளின் கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் தொடர்­பா­கப் பல­ரும் பேசி­வ­ரு­கின்­ற­னர். அர­ச­த­லை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரும் இதன் உரு­வாக்­கம் தொடர்­பாகத் தமிழ்த் தலை­வர்­க­ளி­டம் பல தட­வை­கள் வாக்­கு­று­தி­க­ளை­யும் வழங்­கி­யுள்­ள­னர். கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் இதன் கார­ண­மா­கவே புதிய அர­ச­மைப்பு உருவாக்கப்படுவது நிச்சயமானது என்று தமிழ்மக்களுக்கு நம்­பிக்­கை வெளி­யிட்­டி­ருந்­தார். தமிழ் மக்­க­ளும் அதை முற்­று­மு­ழு­தாக நம்­பி­யி­ருந்­த­னர். ஆனால் அனைத்­தும் ஏமாற்­றத்­தி­லேயே முடிந்­துள்­ளன.

புதிய அர­ச­மைப்பு மிக­மிக அவ­சி­யம்

புதிய அர­ச­மைப்­பின் கீழ் அதி­கா­ரங்­க­ளைப் பகிர்ந்து வழங்­கு­வ­தன் ஊடாகத் தமி­ழர்­கள் சுயாட்­சி­ யைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும். தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள ஒற்­றை­யாட்சி முறை­யி­லான ஆட்­சி­முறை தமி­ழர்­களை அதி­கா­ரங்­கள் எவற்­றை­யும் பெற­மு­டி­யாத நிலைக்­குக் கட்­டிப்­போட்­டுள்­ளது.

மாகாண சபை­கள் அதி­கா­ரங்­கள் எவை­யு­மற்ற வெறும் சபை­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன. இத­னால் எதை­யுமே செய்ய முடி­யாத நிலை­யில் அவை காணப்­ப­டு­கின்­றன. தமி­ழர் பகு­தி­க­ளில் அத்­து­மீ­றிய சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் இடம் பெறு­வ­தற்­கும், சட்­டம் ஒழுங்கு சீர்­கு­லைந்து காணப்­ப­டு­வ­தற்­கும் இதுவே கார­ண­மா­கும். காணி மற்­றும் பொலிஸ் அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தால் இவற்றை மாகாண சபை­க­ளால் தடுத்­தி­ருக்க முடி­யும். ஆனால் அதி­கா­ரங்­கள் வழங்­கப்­ப­டா­த­தால் மாகாண சபைகளால் அவ்விதம் செயற்பட முடி­ய­வில்லை.

இந்த நாடு மூன்று இனத்­த­வர்­க­ளை முதன்மையானவர்களாகக் கொண்­டது. மத ரீதி­யி­லும் மக்­கள் வேறு­பட்­டுக் காணப்­ப­டு­கின்­ற­னர். சிறு­பான்­மை­யின மக்­கள் அடிக்­கடி பாதிப்­புக்­குள்­ளா­வதை இங்கு காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. இதற்கு, இந்த நாடு தமக்­கு­ரி­ய­தெனப் பெரும்­பான்­மை­யின மக்­கள் கரு­து­வதே கார­ண­மா­கும். சுமார் 70 வீத­மா­ன­பெரும்பான்மை இனத்தவர்கள் ஏனைய சிறு­பான்மை இனத்­த­வரை மதிக்­கின்ற மன­நி­லை­யில் இல்­லை­யென்­று­தான் கூற­வேண்­டும்.

அந்­த­ அள­வுக்கு இன­வாத அர­சி­யல்­வா­தி­கள் அவர்­களை மூளைச் சலவை செய்­துள்­ள­னர். இன நல்­லி­ணக்­கம் மக்­க­ளின் அடி­ம­னங்­க­ளி­லி­ருந்து தானா­கவே உரு­வாக வேண்­டும். பிறர் மீதான காழ்ப்­பு­ணர்­வும், வெறுப்­பும் இருக்­கும் வரை­யில் நல்­லி­ணக்­கம் ஏற்­ப­டவே முடி­யாது. இன ஐக்­கி­யத்­தின் வாயி­லா­கவே நாட்டை அபி­வி­ருத்­திப் பாதை­யில் கொண்­டு­செல்ல முடி­யு­மென்­பதைத் தென்பகுதி அரசியல்வாதிகள் உண­ரும்­போது இன நல்­லி­ணக்­கம் தானா­கவே உரு­வா­கி­வி­டும். ஆனால் அதை அவர்­கள் உண­ரு­வ­தற்­கான அறி­கு­றி­கள் எவற்றையும் இது­வரை காண­முடியவில்லை.

உரி­மை­கள் மறுக்­கப்­பட்­டால் வன்­முறை வெடிப்­பது வர­லாறு

ஒரு குறிப்­பிட்ட இன மக்­கள் அடக்கி ஒடுக்­கப்­பட்டு அவர்­க­ளின் உரி­மை­கள் பறிக்­கப்­பட்­ட­தன் கார­ண­மா­கவே உல­கில் ஆயுதம் ஏந்துகின்ற இயக்­கங்­கள் உரு­வெ­டுத்­தன. பாதிக்­கப்­பட்ட இன மக்­கள் தமது உரி­மை­களை அகிம்சை வழி­யில் பெறு­வ­தற்கு இய­லா­து­விட்­டால் ஆயுத நட­வ­டிக்­கை­கள் மூல­மா­க­வா­ வது அவற்­றைப் பெறு­வ­தற்கு முயற்சி செய்­வார்­கள்.

எமது நாட்­டில் தமிழ் இளை­ஞர்­கள் ஆயு­த­மேந்தி போரா­டி­ய­தும் இத­னால்­தான். ஆனால் அவர்­க­ளின் உரி­மைக்­கான போராட்­டம் பயங்­க­ர­வாத முத்­திரை குத்­தப்­பட்டு அழித்­தொ­ழிக்­கப்­பட்­டு­விட்­டது. ஆனால் தமிழ் மக்­க­ளின் உரி­மைக்­கான வேட்கை இன்னமும் தணிந்து விட­வில்லை.

ஆகவே ஆட்­சிக்கு மாறி­மாறி வரு­கின்ற பெரும்­பான்­மை­யின அர­சி­யல்­வா­தி­கள் இந்த யதார்த்­தத்தை இனி­யா­வது புரிந்­து­ கொண்டு செயற்­ப­டு­வ­து­தான் நாட்­டின் மீட்­சிக்கு வழி­வ­குக்­கும்.

You might also like