ஐ.தே.க. விரித்த வலைக்­குள் கூட்­ட­மைப்பு சிக்கி விடுமா?

அமைச்­ச­ர­வைக்­குள் கூட்­ட­மைப்பை உள்­ளீர்ப்­ப­தற்கு ஐக்­கிய தேசி­யக் கட்சி பகீ­ர­தப் பிர­யத்­த­ னம் செய்­வ­தா­கச் செய்­தி­யொன்று தெரி­விக்­கின்­றது.

மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறீ­லங்கா சதந்­தி­ரக்­கட்சி மகிந்த தரப்­பு­டன் இணைந்து கொள்­வ­தற்­கான பேச்­சு­க­ளில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்ள குழப்­ப­மா­ன­தொரு நிலை­யில், அமைச்­ச­ரவையில் இணைந்து கொள்­ளு­மாறு கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

சிறீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின் இரண்டு அணி­க­ளும் இணைந்து கொள்­ளும் பட்­சத்­தில் இன்­றைய கூட்டு அர­சில் பிளவு ஏற்­ப­டு­வது நிச்­ச­ய­ மா­கி­வி­டும்.

இந்த நிலை­யில் ஐக்­கிய தேசி­யக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைக்க வேண்­டு­மா­னால் கூட்­ட­மைப்­பின் ஆத­ரவு அதற்கு அவ­சி­யம் தேவைப்­ப­டும். இதன் கார­ண­மா­கவே இந்த அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

உள்ளூ­ராட்­சித் தேர்­தல்­கள் இடம் பெறப்­போ­கும் நிலை­யில் இன்­றைய கூட்டு அர­சில் பிளவு ஏற்­ப­டு­வது பெரும் குழப்­ப­நி­லை­ யைத் தோற்­று­வித்து விடும்.

மக்­க­ளும் குழம்­பிப்­போய் விடு­வார்­கள். மேலும் அர­சு­டன் ஒட்டி உற­வா­டு­வ­தாக கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­கள் தொடர்ந்து கூட்­ட­மைப்­பைக் குற்­றம் சாட்டி வரு­கின்­ற­னர். இத­னால் நிலை­மை­யை­மி­குந்த அவ­தா­னத்­து­டன் கையா­ள­வேண்­டிய தேவை கூட்­ட­மைப்­புக்கு எழுந்­துள்­ளது.

அரச தலை­வ­ருக்கு  ஆத­ர­வான சுதந்­தி­ரக்  கட்­சி­யி­ன­ரது தய­வால் அரசை நிறு­வினார் ரணில்

கடந்த 2015ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம் இடம்­பெற்ற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி அதிக நாட­ளு­மன்ற ஆச­னங்­க­ளைப் பெற்ற போதி­லும், அத­னால் தனித்து ஆட்சி அமைக்க முடி­ய­வில்லை.

மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யைச் சேர்ந்த நாட­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ர­வு­ட­னேயே ஆட்­சியை அமைக்க முடிந்­தது.

அரச தலை­வ­ரைத் தெரிவு செய்­வ­தற்­கான தேர்­த­லின்­போது ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யின் தலை­வ­ரான ரணில் விக்­கி­ர­ம­சிங்க, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு முழு ஆத­ர­வை­யும் வழங்­கி­னார்.

அவ­ரது ஆத­ரவு கிடைக்­கா­மல் போயி­ருந்­தால் தற்­போ­தைய அரச தலை­வ­ரால் அந்­தப் பத­வி­யில் அமர்ந்­தி­ருக்க முடி­யாது. ஆனால் அதை­யெல்­லாம் மறந்து விட்டு மகிந்­த­வு­டன் உற­வைப் பேண அவர் முயற்சி செய்­வதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக் கொள்ள முடி­யாது.

ஐ.தே.கட்­சியை  தமிழ் மக்­கள் நம்ப  இய­லா­தென்­பதே  கள நில­வ­ரம்

இதே­வேளை கூட்டு அரசு தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு எதை­யும் காண­வில்லை. காலத்தை இழுத்­த­டிக்­கின்ற செயற்­பா­டு­களே இடம்­பெற்று வரு­கின்­றன.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், சிறீ­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் இணைந்து செய்ய முடி­யா­ததை ஐக்­கிய தேசி­யக்­கட்சி தனித்து நிறை­வேற்றி வைக்­கு­மென்­பதை ஒரு­போ­துமே ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

இந்த நிலை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, ரணி­லின் தலை­மை­யி­லான அர­சு­டன் இணைந்து, அமைச்­சுப் பொறுப்­புக்­க­ளை­யும் ஏற்­றுக்­கொள்­வ­தால் நன்மை எது­வும் கிடைக்­கப்­போ­வ­ தில்லை.

விடு­த­லைப்­பு­லி­கள் பிள­வு­ப­டு ­வ­தற்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே கார­ண­மாக இருந்­துள்­ளார். இதைத் தமி­ழர்­கள் இன்­ன­மும் மறந்து விட­வில்லை.

அத்­து­டன் இம்­முறை புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னின் பிறந்த நாள் நிகழ்­வை­யும், மாவீ­ரர்­தின நிகழ்­வை­யும் தமிழ் மக்­கள் சிறப்­பாக கொண்­டா­டி­யுள்­ள­னர்.

இவை புலி­கள் மீதான அவர்­க­ளின் ஈடு­பாடு மங்­கி­வி­ட­வில்லை என்­பதை எடுத்­துக்­காட்­டு­கின்­றன. இந்த நிலை­யில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் கூட்­ட­மைப்­பி­னர் உற­வைப் பேணு­வது சரி­யா­ன­தொரு செய­லாக அமை­ய­மாட்­டாது.

இன்­றைய நிலை­யில் அர­சில் இணை­வது கூட்­ட­மைப்­புக்கு பாத­க­மா­கவே அமை­யும்

மேலும் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் இடம்­பெ­று­கின்ற வேளை­யில் கூட்­ட­மைப்­பி­னர் அமைச்­சர் பொறுப்­புக்­களை ஏற்­ப­தும் சரி­யா­ன­தா­கத் தெரி­ய­வில்லை.

தவ­றான பரப்­பு­ரை­க­ளில் ஈடு­ப­டு­வ­தற்கு எதி­ர­ணி­யி­ன­ருக்கு இது வாய்ப்பு வழங்­கு­வ­தாக அமைந்­து­வி­டும். ஆகவே கூட்­ட­மைப்­பி­ னர் பங்­கா­ளி­க­ளு­டன் இது தொடர்­பாக நன்கு பேசி ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்­டும்.

ஏற்­க­னவே எதிர்க்­கட்­சித் தலை­மைப்­பொ­றுப்பை ஏற்­றுக்­கொண்ட நிலை­யி­லும், கூட்­ட­மைப்பு இன்­றைய அர­சுக்கு வெளியி­லி­ருந்து தனது ஆத­ர­வைத் தெரி­வித்து வரு­கின்­றது.

வர­வுச்­செ­ல­வுத்­திட்­டத்­தின் மீதான வாக்­கெ­டுப்­பின்­போ­தும் அர­சுக்கு ஆத­ர­வா­கவே செயற்­ப­டு­கின்­றது.இதையே ஐக்­கிய தேசி­யக்­கட்சி அர­சி­லும் தொடர முடி­யும்.

தமி­ழ் அரசுக்­கட்சி தனித்­துச் செயற்­பட்ட போது அன்­றைய ஐக்­கிய தேசி­யக்­கட்சி அர­சில் எம்.திருச்­செல்­வம் உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ரா­கப் பதவி வகித்­தமை நினைவுக்கு வரு­கின்­றது ஆனால் அன்­றைய சூழ்­நிலை வேறு இன்­றைய சூழ்­நிலை வேறு என்­று­தான் கூற வேண்­டும்.

இன்று தமிழ் மக்­கள் தமது பிரச்­சி­னை ­க­ளுக்­குத் தீர்­வைக் காண முடி­யாது திண்­டா­டிக் கொண்­டி­ருக்­கின்ற வேளை­யில் கூட்­ட­மைப்­பி­னர் அமைச்­சுப் ப­தவி போன்ற வரப்­பி­ர­சா­தங்­க­ளைப் பெற்று அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருப்­பது நல்­ல­தா­கத் தெரி­ய­வில்லை.

கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் ஒரு பழுத்த அர­சி­யல்­வாதி. தமி­ழர்­க­ளின் நல் வாழ்­வுக்­காக அல்­லும் பக­லும் உழைப்­ப­வர். இவர் தவ­றான முடிவு எதை­யும் எடுக்­க­மாட்­டா­ரென உறு­தி­யாக நம்­ப­லாம்.

அந்த நம்­பிக்­கை­யைக் காப்­பாற்­று­வது கூட்­ட­மைப்­பி­ன­ரின் தலை­யாய கட­மை­யா­கும்.

You might also like