ஓ.எம்.பி. பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்த விஜ­ய­தாச தலை­மை­யில் அமைச்­ச­ரவை உப­குழு

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தி­னால் வெளி­யி­டப்­பட்ட இடைக்­கால அறிக்­கை­யின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு அமைச்­சர் விஜ­ய­தாச ராஜ­பக்ச தலை­மை­யில் 10பேர் கொண்ட அமைச்­ச­ரவை உப குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தக் குழுவை நிய­மிப்­ப­தற்­கும், உப­கு­ழு­வி­னால் வழங்­கப்­ப­டும் ஆலோ­ச­னை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கும் தேவை­யான வச­தி­களை மேற்­கொள்­ள­வும், அனு­மதி வழங்­கக் கோரி அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னால் சமர்­பிக்­கப்­பட்­டுள்ள அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­துக்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

அரச தலை­வ­ரி­னால் சமர்­பிக்­கப்­பட்­டுள்ள அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­தில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது, காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தால் 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­பட்ட இடைக்­கால அறிக்­கை ­யின் மூலம் பாதிப்பை ஈடு­செய்­யக்­கூ­டிய சட்­ட­ரீ­தி­யி­லான பொறுப்­புக்­காக மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய நட­வ­டிக்கை, இவ்­வா­றான சம்­ப­வம் மீண்­டும் இடம்­பெ­றாத வகை­யில் பார்த்­துக் கொள்­வ­தற்­கான சட்ட ரீதி­யி­லான மறு­சீ­ர­மைப்பு மேற்­கொள்­வது தொடர்­பில் தனது பரிந்­து­ரை­க­ளைச் சமர்ப்­பித்­துள்­ளது.

இதே போன்று பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு நிதி உதவி வேலைத் திட்­டம் கடன் உதவி வேலைத் திட்­டம், வீட­மைப்பு அபி­வி­ருத்தி வேலைத் திட்­டம், கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு தேவை­யான உத­வி­க­ளைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான வேலைத் திட்­டம், தொழிற்­ப­யிற்சி, வாழ்க்கை நிலையை மேம்­ப­டுத்­து­தல், தொடர்­பான பரிந்­து­ரை­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­தப் பரிந்­து­ரை­களை மதிப்­பீடு செய்து பொருத்­த­மான எதிர்­கால நட­வ­டிக்­கை­க­ளுக்­கான பரிந்­து­ரைப்­ப­தற்­காக அமைச்­சர் விஜ­ய­தாச ராஜ­பக்ச தலை­மை­யில் கீழ் மேலும் 10 அமைச்­சர்­க­ளைக் கொண்ட அமைச்­ச­ரவை துணை குழு ஒன்றை நிய­மிப்­ப­தற்­கும் உப குழு­வின் ஆலோ­ச­கைளை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான வச­தி­களை செய்­வ­தற்­கும் அனு­மதி கோரி அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் சமர்­பிக்­கப்­பட்­டது. இந்­தப் பத்­தி­ரத்­துக்கே அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

அமைச்­சர் விஜ­ய­தாச ராஜ­பக்ச, தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­கக் கூடாது என்று வலி­யு­றுத்தி வரு­ப­வர். புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­காக நாடா­ளு­மன்­றம் அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்­டமை தவறு என்று கருத்­துத் தெரி­வித்­தி­ருந்­த­வர் என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like