கஞ்சாச் செடியுடன் கைதானவர்- பிணையில் விடுவிப்பு!!

0 48

யாழ்ப்பாணம் நாவற்குளிப் பகுதியில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் கைதான தென்னிலங்கை நபரை ஒரு லட்சம் ரூபா பிணையில் செல்லுமாறு சாவகச்சேரி நீதிமன்றில் இன்று உத்தரவிடப்பட்டது.

சாவகச்சேரி பொலிஸாருக்குகட கிடைத்த தகவலையடுத்து நாவற்குளியில் கட்டட நிரமாணப் பணிகள் இடம்பெறும் பகுதியில் பொலிஸார் சோதனை நடத்தினர்.

இதன் போது கஞ்சாச் செடி வளர்க்கப்பட்டமை கண்டறியப்பட்டது. அதனைக் கைப்பற்றியதுடன் அதனை வளர்த்த தெல்தெனிய வாசியையும் பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த நபர் சாவகச்சேரி நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார். அவரை ஒரு லட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.

You might also like