கடற்கரைக் கரப்பந்தாட்டம்- இரு அணிகளுக்குக் கிண்ணம்!!

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழக்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில், இருபாலருக்குமான கடற்கரை கரப்பந்தாட்டத் தொடரில் ஆண்கள் பிரிவில் சிவகௌரி விளையாட்டுக்கழக அணியும், பெண்கள் பிரிவில் தோப்புக்காடு விளையாட்டுக்கழக அணியும் கிண்ணம் வென்றன.

காரைநகர் உல்லாசக் கடற்கரையில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் முதலாவதாக இடம் பெற்ற ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் சிவகௌரி விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து, இளஞ்சுடர் விளையாட்டுக்கழக அணி மோதியாது.

2:1 என்ற செற் கணக்கில் சிவகௌரி விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது, தொடர்த்து இடம் பெற்ற பெண்களுக்கான இறுதியாட்டத்தில் தோப்புக்காடு விளையாட்டுகழக்கழக அணியை எதிர்த்து கலாநிதி விளையாட்டுக்கழக அணி மோதியது.

2:0 என்ற செற் கணக்கில் தோப்புக்காடு விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.

You might also like