கண்களின் ஆரோக்கியத்துக்கு…!!

கண்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே எளிதான வழிமுறைகளை பின்பற்றலாம்.

கண்களை மூடிக்கொண்டு, நறுக்கிய வெள்ளரிக்காயை வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கருவளையம் நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியாக இருக்கும்.

வெள்ளரிக்காய் – 1/2, உருளைக்கிழங்கு – 1/2, மஞ்சள் தூள் – சிறிதளவு, எலுமிச்சை – 1. வெள்ளரிக்காயையும் உருளைக்கிழங்கையும் நன்றாக அரைத்து, அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். பின்னர், கண்களின் மேல் ஒரு
துணியை வைத்துக்கொண்டு அதன்மேல் இந்தக் கலவையை பூசிக்கொள்ளவும். 15 நிமிடங்கள் வைத்திருந்து கண்களைக் கழுவவும். (இவை, நேரடியாகக் கண்களின் மேல் படக்கூடாது). இவ்வாறு பயன்படுத்துவதால், கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

ரோஸ் வாட்டரை துணியில் நனைத்து கண்களை துடைத்து வந்தால், கண்களுக்குப் பொலிவு கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

ஒரு தேக்கரண்டி சோம்பை ஒரு கப் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைக்கவும். அந்தத் தண்ணீரால் முகத்தைக் கழுவி வந்தால், கண்களின் சோர்வு நீங்கும்.

You might also like