கபடிப் போட்டியில் இரு அணிகளுக்குச் சம்பியன்!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச கடற்கரை கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக் கழக அணியும், பெண்கள் பிரிவில் சாவகச்சேரி புனித லிகோரியார் விளையாட்டுக் கழக அணியும் வெற்றி பெற்றன.

பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான குழு நிலைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

சாவகச்சேரி புனித லிகோரியார் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று இடம்பெற்ற கபடி இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் மட்டுவில் மோனதாஸ் அணியும், நாவற்குளி சான்றோர் அணியும் களமிறங்கின.

பெண்கள் பிரிவில் சாவகச்சேரி புனித லிகோரியார் விளையாட்டுக்கழக அணியும், நாவற்குளி சான்றோர் விளையாட்டுக்கழக அணியும் களமிறங்கின.

போட்டிகளில் ஆண்கள் பிரிவில் மட்டுவில் மோகனதாஸ் அணியும், பெண்கள் பிரிவில் சாவகச்சேரி புனித லிகோரியார் அணியும் சம்பியனாகின.

You might also like