கரந்தாய் காணிகளை விடுவிக்க எல்.ஆர்.சியின் கடிதம் தாமதம்!!

தென்­னைப் பயிர்ச் செய்கை சபை அப­க­ரித்­துள்­ளது என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டு­வந்த கரந்­தாய் காணி­களை மீண்­டும் ஒப்­ப­டைப்­ப­தற்கு தென்­னைப் பயிர்ச் செய்­கைச் சபை தயா­ரா­கவே உள்­ளது என்று அதன் முகா­மை­யா­ளர் வைகுந்­தன் தெரி­வித்­தார்.

அந்­தக் காணி­கள் தென்­னைப் பயிர்ச் செய்கை சபைக்கு வழங்­கி­ய­மைக்­கான ஆவ­ணங்­க­ளும் இருப்­ப­தால் காணி சீர் திருத்த ஆணைக்­குழு அந்­தக் காணி­களை மக்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கு­மாறு கடி­தம் தந்­தால் நாங்­கள் காணி­களை ஒப்­ப­டைப்­போம் என்­றும் முகா­மை­யா­ளர் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

மக்­க­ளு­டைய காணி­கள் என்று கூறப்­ப­டும் பளை­யில் உள்ள கரந்­தாய் காணி­கள் மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே பெருந்­தோட்ட அமைச்­சால் தென்­னைப் பயிர்ச் செய்கை சபைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதற்கு தென்­னைப் பயிர்ச் செய்கை சபை வரி­யும் கட்­டி­யுள்­ளது. ஆனால் அதை அறி­யாது காணி சீர்­தி­ருத்த ஆணைக்­கு­ழு­வும், அதி­கா­ரி­க­ளும் அந்­தக் காணி­களை மக்­க­ளுக்கு வழங்­கி­யுள்­ள­னர்.
போரின் பின்­னர் அந்­தக் காணி­யில் அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு வந்­த­போதே காணி மக்­க­ளு­டை­யது என்­பது தெரி­ய­வந்­தது. அப்­போது அங்கு குடி­யி­ருந்த மக்­க­ளுக்கு நடந்த சம்­ப­வம் தவ­று­தான். அத­னு­டன் தொடர்பு பட்­ட­வர்­க­ளுக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. மக்­க­ளு­டைய காணி­களை அப­க­ரிப்­பது எமது நோக்­கம் இல்லை. இங்கு காணி சீர்­தி­ருத்த ஆணைக்­கு­ழுவே தவ­றி­ழைத்­துள்­ளது.

அந்­தக் காணி­க­ளில் நாம் தாய் தென்­னைப் பயிர்­களை நடுகை செய்­துள்­ளோம். காணி­களை மக்­க­ளி­டம் ஒப்­ப­டை­யுங்­கள் மாற்­றுக் காணி தரு­கி­றோம் என்று காணி சீர் திருத்த ஆணைக்­குழு கடி­தம் தந்­தால் நாங்­கள் அந்­தக் காணி­களை மக்­க­ளி­டமே ஒப்­டைப்­போம். அல்­லது காணி­களை நீங்­களே எடுத்­துக் கொள்­ளுங்­கள், மக்­க­ளுக்கு மாற்­றுக் காணி­கள் வழங்­கு­கி­றோம் என்­றா­லும் அந்­தக் காணி­களை நாங்­களே பரா­ம­ரிப்­போம். காணி சீர்த்­தி­ருத்த ஆணைக்­கு­ழு­தான் முடி­வெ­டுக்­க­ வேண்­டும்.

எமக்­கும் காணி­க­ளைத் தந்­து­விட்டு, அதே காணி­களை மக்­க­ளி­ட­மும் கொடுத்து விட்டு, இப்­போது தென்­னைப் பயிர் செய்கை சபை­யில் பழி­போ­டு­வதை ஏற்­றுக் கொள்­ள­மு­டி­யாது.

மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­களை அáளவீடு செய்யுங்­கள் என்று கூறி­யுள்­ளோம். தற்­போது காணி அளவீடு செய்யப்பட்டுள் ளது. எனி­னும் ஆணைக்­குழு கடி­தம் தரு­வ­தி­லேயே தாம­தம் ஏற்­ப­டு­கி­றது -– என்­றார்.

பின்­னணி
1976ஆம் ஆண்டு காணி சீர்­தி­ருத்த ஆணைக்­கு­ழு­வால் கரந்­தாய் மக்­க­ளுக்கு காணி­கள் வழங்­கப்­பட்­டன. போரி­னால் அவர்­கள் அங்­கி­ருந்து வெளி­யே­றி­னர். மீண்­டும் 2014 ஆம் ஆண்டு குடி­ய­மர்ந்­த­னர். அதன் பின்­ன­ரும் இங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்த மக்­கள் 2015ஆம் ஆண்டு அங்கு வந்து தமது காணி­க­ளில் கொட்­டில்­களை அமைத்­துக் குடி­யி­ருந்­த­னர்.

அந்­தக் காணி­கள் தென்­னைப் பயிர்ச் செய்கை சபை­யி­ன­ரால் உரி­மை­கோ­ரப்­பட்­டது. அவர்­கள் தமக்குச் சொந்­த­மான காணி எனத் தெரி­வித்து அங்கு மீளக்­கு­டி­ய­ மர்ந்த மக்­க­களைப் பளைப் பொலி­ஸா­ரின் உத­வி­யு­டன் விரட்­டி­ய­ டித்­த­னர். பலர் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­டி ­ருந்­த­னர். தங்­க­ளு­டைய காணி­க­ளி­லேயே அந்த மக்­கள் அத்­து­மீ­றிக் குடி­ய­மர்ந்­த­னர் என தென்­னைப் பயிர்ச்­செய்கை சபை­யி­ன­ரால் கிளி­நொச்சி நீதி­வான் மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது. வழக்கு விசா­ர­ணை­க­ளில் மக்­கள் தங்­க­ளு­டை­யது தான் அந்­தக் காணி என கோரும் ஆவ­ணத்தை சமப்­பிக்­கு­மாறு தெரி­வித்து கைது செய்­யப்­பட்ட அனை­வ­ரை­யும் மன்று பிணையில் விடு­வித்­தது.

இந்த விட­யம் மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழு­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. காணி தொடர்­பில் ஆரா­யப்­பட்­டது. காணி சீர்­தி­ருத்த ஆணை­யா­ளர் அது மக்­க­ளு­டைய காணி­தான் என்­பதை ஆணித்­த­ர­மாக் கூறி­னார். தென்­னைப் பயிர்ச்­செய்கை சபை­யி­னரை அந்­தக் காணி­க­ளில் இருந்து வெளி­யேற மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழு கால அவ­கா­சம் வழங்­கி­யது.

ஐந்­துக்­கும் மேற்­பட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டங்­க­ளில் கரந்­தாய் காணி தொடர்­பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இருந்­தும் எந்­தத் தீர்­வு­க­ளும் பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை. மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வில் முறைப்­பா­டு­கள் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தன. ஆணைக்­குழு விசா­ர­ணை­களை மேற்­கொண்டு காணி­களை ஒப்­ப­டைக்­கு­மாறு கூறி­யது இருந்­தும் காணி­கள் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வில்லை. ஓடி ஓடி அலைந்து நான்கு ஆண்­டு­கள் மக்­கள் களைத்து விட்­ட­னர் ஆனால் தீர்வு இல்லை. அந்­தக் காணி­க­ளில் தென்­னைப் பயிர்ச் செய்கை சபை­யால் வைக்­கப்­பட்ட தென்ங்­கன்­று­கள் இன்று வளர்ந்து பெரிய மரங்­க­ளா­கி­யுள்­ளன.

You might also like