கலைஞரும் அரசியல்வாதிகளும்!!

பகுதி-49

ஈழத்­தில் இறு­திப் போர்க் கால­கட்­டத்­தில், ஈழத்­த­மி­ழ­ருக்கு எதி­ரான போரை நிறுத்­து­மாறு கோரித் தமிழகத்தில் முத்­துக்­கு­மா­ர் தீக்­கு­ ளித்­தார். இது காட்­டுத் தீ போன்று பரவி உல­கெங்­கும் வாழும் தமி­ழர் மத்­தி­யில் ஈழ ஆத­ர­வுப் போராட்­டத்தைத் தீவி­ரப்­ப­ டுத்­தி­யி­ருந்­தது. தமி­ழ­கத்­தில் மாண­வர்­கள் போராட்­டத்­தைத் தலைமை தாங்கி நடத்த ஆரம்­பித்­தார்­கள்.
முத்­துக்­கு­மார் தனது இறுதி அறிக்­கை­யில் ஈழத்­தில் நடந்த இறு­திப் போரில் இந்­திய இரா­ணு­வம் நேர­டி­யா­கப் பங்கு கொண்டு தமி­ழர்­களை அழிக்­கி­றது என்று குற்­றம்­சாட்­டி­னார். அத­னால் தி.மு.காவின் ஆத­ர­வு­டன் ஆட்­சி­செய்த இந்­தி­யத் தேசிய காங்­கி­ர­சுக்கு எதி­ரா­க­வும் இந்­திய மத்­திய அரச இயந்­தி­ரத்­துக்கு எதிரா­க­வும் போராட்­டங்­கள் தமி­ழ­கத்­தில் தீவி­ர­ம­டைந்­தன.

முத்­துக்­கு­மா­ரின் எழுச்சி
தீயா­கப் பர­வி­யது
‘உண்­மை­யில், இலங்­கை­யில் இந்­திய இரா­ ணுவ நட­வ­டிக்கை என்­பது தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­னது மட்­டு­மல்ல. ஒட்­டு­மொத்த இந்­தி­யர்­க­ளு­க்குமே எதி­ரா­னது.’ என்று முத்­துக்­கு­மார் குறிப்­பிட்­டி­ருந்­தார். ஏற்­க­னவே இருக்­கும் தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள் தமி­ழர்­க­ளுக்­காக எது­வும் செய்­ய­மாட்­டார்­கள். அத­னால் புதிய தலை­வர்­கள் உரு­வாக வேண்­டும். மாண­வர்­க­ளின் வேக­மும், மக்­க­ளி­ட­மி­ருக்­கும் கோப­மும் இணைந்து தமி­ழக வர­லாற்றை அடி­ யோடு மாற்­றட்­டும் ஏன்று தனது விருப்­பத்­தை­யும்
குறிப்­பிட்­டி­ருந்­தார். ‘எங்­கள் தமி­ழர்க்கு இன்­னல் விளைந்­தால் எரி­ம­லை­யாகி வெடிப்­போம்’ என்ற ஈழக்­க­வி­ஞர் காசி­ ஆ­னந்­த­னின் பாடலை ஓர் அறி­வா­யு­த­மாக ஏந்­துங்­கள். என் உட­லைக் காவல்­துறை அடக்­கம் செய்­து­விட முய­லும். விடா­தீர்­கள். என் பிணத்­தைக் கைப்­பற்றி, அதைப் புதைக்­கா­மல் ஒரு துருப்­புச் சீட்­டாக வைத்­தி­ருந்து போராட்­டத்­தைக் கூர்­மைப்­ப­டுத்­துங்­கள்.’ என்று முத்­துக் கு­மார் உருக்­க­மான வேண்­டு­கோ­ளை­யும் விட்­டி­ருந்­தார். முத்­துக்­கு­மா­ரின் உருக்­க­மான கடி­தம் காட்­டுத் தீயா­கப் பரவியதும் தமி­ழ­கத்­தில் அனைத்­துக் கல்­லூ­ரி­கள், பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் மாண­வர்­கள் வீதி­யில் இறங்­கிப்­போ­ரா­டி­னார்­கள்.

கலை­ஞ­ரின் அச்­ச­மும்
அர­சி­யல்­வா­தி­கள் தவிர்ப்­பும்
முத்­துக்­கு­மா­ரின் சாவை ஒட்டி மாண­வர்­கள் மத்­தி­யில் எழுச்­சி­ய­டைந்த போராட்­டத்­தைக் கண்டு கலை­ஞர் அரசு அச்­ச­ ம­டைந்­தது. போராட்­டத்தை மழுங்­க­டிப்­ப­தற்­கான முயற்­சி­க­ளில் இறங்­கி­யது. அதே­வேளை முத்துக்­கு­மா­ரின் வேண்­டு­கோ­ளுக்கு அமை­வாக அவ­னது இறுதி ஊர்­வ­லம் மாண­வர் எழுச்­சி­யைத் தூண்­டு­வ­தாக அமைந்­தி­ருந்­தது. இந்­தக் கொந்­த­ளிப்பு நிலை­மை­யைப் பல அர­சி­யல்­வா­தி­கள் தங்­க­ளுக்­குச் சாத­க­மா­கப் பார்த்­தார்­கள். மாண­வர்­கள் அதற்கு அனு­ம­திக்­க­வில்லை. முத்­துக்­கு­மா­ரின் இறுதி ஊர்­வ­லத்­தில் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு மாண­வர்­கள் இடம்­தர மறுத்­தார்­கள். ‘1965ஆம் ஆண்­டில் நடந்த இந்தி எதிர்ப்­புப் போரை சில சுய­ந­ல­மி­க­ளின் கையில் ஒப்­ப­டைத்­த­தால்­தான் தமி­ழக வர­லாறு கற்­கா­லத்­துக்கு இழு­பட்­டுள்­ளது. அந்­தத் தவறை நீங்­கள் செய்து விடா­தீர்­கள்’ என்ற முத்­துக்­கு­மா­ரின் கருத்­தின் அடிப்­ப­டை­யில் செயற்­பட ஆரம்­பித்­தார்­கள்.

இனப்­ப­டு­கொ­லை­க­ளைச்
சுட்­டிக் காட்­டி­னார் முத்­துக்­கு­மார்
‘வன்­னி­யில், விடு­த­லைப் புலி­க­ளுக்கு எதி­ரான போர்­தான் நடக்­கி­றது என்­கி­றார்­கள். புலி­கள் மக்­க­ளைக் கேட­ய­மா­கப் பயன்­ப­டுத்­து­கி­றார்கள் என்­கி­றார்­கள். அப்­ப­டி­யா­னால் அரசு அறி­வித்­தல் விடுத்த பகு­திக்கு வந்த மக்­களை ஏன் கொலை செய்­தார்­கள்? இது ஒன்று போதுமே, தமிழ்­மக்­கள் விடு­த­லைப் புலி­க­ளைச் சார்ந்து நின்­றா­லும் சரி, இலங்கை அர­சைச் சார்ந்து நின்­றா­லும் சரி, தமி­ழர்­கள் என்ற கார­ணத்­துக்­கா­கவே அவர்­கள் கொல்­லப்­ப­டு­கி­றார்­கள் என்­ப­தற்கு’ என்று முத்­துக்­கு­மார் தனது இறுதி அறிக்­கை­யில் மேலும் குறிப்­பிட்­ட­தோடு இலங்­கை­யில் இறு­திப் போர் நடந்த காலத்­தில் நிகழ்ந்த கொலை­களை இனப்­ப­டு­கொலை என்­றும் சுட்­டிக்­காட்­டி­னார்.

இந்­தி­யா­வின் நாட்டாமை­யில்
உலக நாடு­கள் புலி­க­ளுக்கு
எதி­ரா­கப் போர் புரி­கின்­றன
உல­க­நா­டு­கள் எல்­லாம் சேர்ந்து அநீ­தி­யா­ன­தொரு போரை ஈழத்­தில் நடத்­து­கின்­றன. அதைப் பார்த்து மௌன­மாக இருக்­கா­தீர்­கள் என்­றும் முத்­தக்­கு­மார் கொதித்­தி­ருந்­தார். ‘இந்­தியா, பாகிஸ்­தான், சீனா ஆயு­தம் கொடுத்­தும், ஜப்­பான் பணம் கொடுத்­தும், கூடு­த­லாக, இந்­தியா நாட்­டாமை செய்­தும் தமி­ழர்­க­ளைக் கொல்­கின்­ற­னர் என்­றால், நீங்­கள் உங்­கள் மௌனத்­தின் மூல­மா­க­வும், பாரா­மு­கத்­தின் மூல­மா­க­வும் அதே கொலை­யைத்­தான் செய்து கொண்­டி­ருக்­கி­றீர்­கள் என்­பதை ஏன் உண­ர­வில்லை? ஆயு­தம் தாங்­கிப் போரா­டு­வ­தால் மட்­டுமே யாரும் தீவி­ர­வா­தி­யா­கிட மாட்­டார்­கள். ‘அறத்­துக்கே அன்பு சார்­பென்ப அறி­யார். மறத்­துக்­கும் அஃதே துணை’ என்று பாடி­யுள்­ளார் எங்­கள் திரு­வள்­ளு­வர். புலி­கள் ஆயு­தங்­க­ளைக் கீழே போட வேண்­டும் என்­கி­றார் ஜெய­ல­லிதா – என்­னவோ பிரச்­சி­னையே புலி­கள் ஆயு­தம் எடுத்­த­தால்­தான் வந்­தது என்­ப­தைப்­போல.

உண்­மை­யில், புலி­கள் தமி­ழீழ இன அழிப்­பி­லி­ருந்து உரு­வாகி வந்­த­வர்­களே தவிர, கார­ண­கர்த்­தாக்­கள் அல்­லர் என்­றும் தனது ஆணித்­த­ர­மான கருத்தை இந்­திய அர­சுக்­கும் தமி­ழக அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் தெரி­வித்­தி­ருந்­தார் முத்­துக்­கு­மார். இலங்­கை­யில் நடக்­கும் போரில் இந்­தியா நியா­ய­மின்றி நடந்­தது என்­ப­தை­யும் கூறத்­த­வ­ற­வில்லை.

சீனா­வின் டாங்­கி­கள், இந்­தி­யா­வின் உளவு விமா­னங்­கள், பாகிஸ்­தா­னின் ஆர்­டி­ல­ரி­கள் மட்­டு­மல்ல… இப்­போது எமது மக்­க­ளைக் கொலை­செய்து வரு­வது பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் மௌன­மும்­தான் என்­பதை எப்­போது உணர்­வீர்­கள்- நியா­யத்­தின்­பால் பெரு­வி­ருப்­புக் கொண்ட ஒரு மக்­கள் சமூ­கம் பூமி­யி­ லி­ருந்து முற்­றா­கத் துடைத்­த­ழிக்­கப்­பட்ட பிறகா?’ என்று பன்­னா­டு­க­ளைப் பார்த்­துக் கேள்வி எழுப்­பித் தீ மூட்­டி­னார் முத்­துக்­கு­மார்.

இது அப்­போது தமி­ழ­கத்­தில் ஆட்சி செய்த திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் ஆட்­சிக்­குப் பேரி­டி­யா­க­வும் கலை­ஞ­ரின் அடி­வ­யிற்­றில் பற்­றிய தீயா­க­வும் ஆனது.

(தொட­ரும்)

You might also like