கவலைக்கும் பரிகாசத்துக்குமுரிய இலங்கை அரசியல் செயற்பாடுகள்

தனி­நாடு கோரி மூன்று தசாப்­த­கா­ல­மாக போர் புரிந்த தமிழ் ஈழ விடு­த­லைப் புலி­கள் (பல­நா­டு­க­ளி­னால் பயங்­க­ர­வா­தி­கள் என முத்­திரை குத்­தப்­பட்­ட­வர்­கள்) கூட எத்­த­னையோ சந்­தர்ப்­பங்­க­ளில், இலங்கை அர­சு­டன் பேச்­சுக்­கள் நடத்­தி­யுள்­ள­னர். இந்த நிலை­யில் அந்த நீண்­ட­கா­லப் போர் முடிந்து நாடு தற்­பொ­ழுது எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­களை, அர­சி­யல் சிக்­கல்­க­ளைக் கருத்­தில் கொண்டு, நாட்­டி­லுள்ள சகல கட்­சி­க­ளும் தங்­க­ளுக்­கி­டை­யே­யான பேதங்­களை மறந்து ஒன்­றாய் அமர்ந்து கூடிப்­பேசி நாட்­டின் தேசி­யப் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ண­வேண்­டிய கால­கட்­ட­மிது. இது ஏற்­க­னவே எதிர்­பார்க்­கப்­பட்­ட­தொரு விட­யம்­தான்.

உறுதிநிலை அற்றதாக
இலங்கையின் அரசியலும்
பொருளாதாரத் தன்மையும்

இலங்கை தற்­பொ­ழுது, அர­சி­ய­லி­லும் சரி, பொரு­ளா­தா­ரத்­தி­லும் சரி ஒரு உறுதித் தன்மையுடன் இல்லை என்­பது தௌிவா­கப் புரி­யு­மொன்று. அற்ப கார­ணங்­க­ளுக்­காக அர­சி­யல் விளை­யாட்­டில் ஈடு­பட்­டுள்ள இலங்­கை­யி­லுள்ள அரச தரப்பு மற்­றும் எதிர்க்­கட்சி அர­சி­யல்­வா­தி­கள் அனை­வ­ரும் தங்­களை நிர்க்க­தி­யாக விட்­டு­விட்­டார்­கள் என சாதா­ரண பொது­மக்­கள் அச்­சத்­து­ட­னேயே வாழ்­கி­றார்­கள். ஒரு முடி­வில்­லா ­மல் தொடர்ந்து கொண்­டி­ருக்­கும் இந்த அர­சி­யல் நாட­கத்­தில், தின­மும் ஒன்று அல்­லது இரண்டு பாகங்­கள்­அ­ரங்­கே­றிக்­கொண்­டி­ருக்­கின்­றன.

யார் எந்­தக் கட்சி­யி­லி­ருக்­கி­றார்­க­ ளென்­ப­தும், ஒரு கட்­சி­யில் எத்­தனை உறுப்­பி­னர்­கள் உள்­ள­ னர் போன்ற என்ற விட­ய­ம்கூடத் தெளி வாக இல்­லாத ஒரு குழப்­ப­நிலை நில­வு­கின்­றது. பரி­தா­பத்­திற்­கு­ரிய வாக்­கா­ளர்­களோ ஏதா­வது ஒரு அதி­ச­யம், அற்­பு­தம் நடந்து எங்­கள் அர­சி­யல் தலை­வர்­கள் விழித்­தெ­ ழுந்து இந்த நாட்­டின் அர­சியலில் மாற்­ற­மொன்­றைக் கொண்டு வரு­வார்­கள் என்ற நம்­பிக்­கை­யு­டன் கட­வுளைப் பிரார்த்­தித்­த­ப­டி­யி­ருக்­கி­றார்­கள்.

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது
போன்று செயற்படும் கூட்டு எதிரணி

உண்­மை­யி­லேயே எங்­கள் தலை­வர்­கள் இந்த நாட்டை நேசிப்­ப­வர்­க­ளாக இருந்­தால், அல்­லது இந்த நாட்­டின் எதிர்­கால சுபீட்­சம் குறித்து அக்­க­றை­காட்டி, நாட்டை சரி­யான பாதை­யில் இட்­டுச் செல்ல விரும்­பி­னால், அவர்­கள் அனை­வ­ரும்­கூடி நாட்­டின் பிரச்­சி­னை­க­ளைப் பற்றி விரி­வாக ஆராய்ந்து அவற்­றுக்­கான தீர்­வொன்றை எட்­ட­மு­னைய வேண்­டும். அர­சுக்­குள்­ளேயே பல­த­ரப்­பட்ட உட்­பூ­சல்­கள் தலை­வி­ரித்­தா­டும் நிலை­யில், கூட்டு எதி­ர­ணி­யி­னரோ, எரி­கிற நெருப்­பில் எண்ணை ஊற்­று­வதுபோல நாட்­டைக் குழப்­பு­வ­தற்­காக தொழில் சங்க நட­வ­டிக்­கை­கள், பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள், மருத்­து­வர்­கள் போன்­ற­வர்­க­ளின் வேலை நிறுத்­தப் போராட்­டங்­கள் போன்­ற­வற்றை சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னர்­க­ளுக்கு தூண்­டு­த­ல­ளித்து முன்­னெ­டுக்க வைப்­பிக்­கின்­றனர்.

இந்த நட­வ­டிக்­கை­கள் எல்­லாம் எந்த அள­வுக்குப் பொது­மக்­க­ளை­யும், அதி­லும் குறிப்­பாக ஏழை மக்­களை எவ்­வ­ளவு தூரம் மன­உ­ளச்­ச­லுக்கு, பாதிப்­பிற்கு உள்­ளாக்­கும் எ்னப­தனை எவ­ருமே உணர்­வ­தில்லை. அத்­தி­யா­வ­சிய சேவை­கள் மட்­டு­மல்ல இந்­தப் போராட்­டக்­கா­ரர்­க­ளின் நட­வ­டிக்­கை­க­ளால் பாதை­கள் மூடப்­பட்டு, போக்­கு­வ­ரத்து நெரி­சல்­கள் ஏற்­பட்டு ஏற்­க­னவே விரக்தி அடைந்­தி­ருக்­கும். பொது­மக்­களை அரசு மீது வெறுப்­புக் கொள்ள வைக்க இத்தகைய செயற்பாடுகள் கார­ண­மா­கின்­றன. நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி முடங்கிப்போயிருக்கும் இன்­றைய நிலை­யில், வாழ்க்­கைச் செல­வு­கள் ‘‘ரொக்­கட்’’ வேகத்­தில் உயர்ந்து சென்­று­கொண்­டி­ருக்­கின்­றன. அதே­வேளை அர­சி­ட­மி­ருந்து எந்­தச் சலு­கை­க­ளும் கிடைக்­காத நிலை­யில், குறை­வில்­லா­மல் பெருமளவில் வரி­கள் மட்­டுமே நாட்டு மக்­க­ளது தலை­க­ளில் சுமத்­தப்­ப­டு ­கின்­றன.

அதே­வேளை இந்த நாட்­டின் அரச தலை­வரோ, தலைமை அமைச்­சரோ, அல்­லது கூட்டு எதி­ர­ணி­யின் தலை­மையோ இந்தத் துர­திஷ்­ட­வ­ச­மான அர­சி­யல் சிக்­கல்­க­ளி­லி­ருந்து நாட்டை மீட்­ப­தற்­காக முத்­த­ரப்­பி­ன­ரும் ஒன்­று­கூ­டிக் கலந்­து­ரை­யாடி எப்­ப­டி­யா­வது இந்த அர­சி­யல் சக­தி­யி­லி­ருந்து வௌியே­வர முய­ல­வேண்­டும். அது இன்­றைய காலத்­தின் முக்­கிய தேவை ஆகி­யுள்­ளது. அதை விடுத்து ஒரு­வரை ஒரு­வர் குற்­றஞ்­சாட்­டிக் குறை கூறிக்­கொண்­டி­ ருப்­ப­தில் பய­னே­து­மில்லை. நாட்­டு­மக்­க­ளில் ஒரு தரப்­பி­னர் இர­வும் பக­லும் அழுது புலம்­பிக் கொண்­டி­ருக்க, ஒரு­சி­லர் கொலை வெறி­பி­டித்து அலைந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களது
நாகரீகமற்ற அரசியல்
முன்னெடுப்புக்கள்

கடந்­த­வா­ரம் நாடா­ளு­மன்­றத்­தில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­க­ளைப் பார்க்­கும்­பொ­ழுது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு மட்­டு­மல்ல, கட்­சித் தலை­வர்­க­ளுக்­கும்­கூட யார் யார் தங்­கள் கட்சி உறுப்­பி­னர்­கள், யார் எதிர்க் கட்சி உறுப்­பி­னர் என்­பது குழப்­ப­மான நிலை­யி­லேயே உள்­ள­தாக எண்ண வைக்­கின்­றது. தலைமை அமைச்­ச­ருக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளித்­த­த­னூ­டாக அர­சி­லி­ருந்­தும், தன் பிரதி சபா­நா­ய­கர் பத­வி­யி­லி­ருந்­தும் விலகி, அர­சில் மட்­டு­மல்­லாது இலங்கை கிரிக்­கெட் சபை­யி­லி­ருந்­தும் வௌியேற்­றப்­பட்ட திலங்க சுமத்­தி­பா­ல­வின் வெற்­றி­டத்தை நிரப்­பு­வ­தற்­காக நாடா­ளு­மன்­றத்­தில் இடம்­பெற்ற வாக்­க­ளிப்­பில் ஐக்­கிய தேசி­யக் கட்சி சார்­பாக மொன­ரா­கல மாவட்­டத்­தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஆனந்த குமா­ரா­சி­ரி­யின் பெயரை ஐ.தே.கட்சி முன்­மொ­ழிய, முன்­னாள் அமைச்­சர் எஸ்.பி.திசா­நா­யக, முன்­னாள் அமைச்­சர் சுதர்­சினி பெர்­ணான்­டு­புள்­ளே­யின் பெயரை முன்­மொ­ழிந்­துள்­ளார். இந்த இரண்டு முன்­னாள் அமைச்­சர்­க­ளுமே, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் ஆத­ரவா­ளர்­கள் என்­பது மட்­டு­மல்ல, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஆத­ரவா­ளர்­க­ளு­மா­வார்­கள். ஆனால் இப்­போது அவர்­கள் நாடா­ளு­மன்­றத்­தில் அமர்ந்­தி­ருப்­பதோ எதிர்க்­கட்சி வரி­சை­யில், பிரதி சபா­நா­ய­கர் பத­விக்­கான இர­க­சிய வாக்­கெ­டுப்­பின்­போது ஆனந்த குமா­ர­சி­ரிக்கு சார்­பாக 98வாக்­கு­கள் கிட்­டின.

அவ­ருக்கு எதிராகக் கள­மி­றங்­கிய சுதர்­சினி பெர்­ணான்­டு­புள்ளே 53வாக்­கு­க­ளைப் பெற்று தோல்­வி­யைத் தழுவ, ஆனந்த குமா­ர­சிரி பிரதிச் சபா­நா­ய­க­ராக தெரி­வா­னார். இது­வோர் இர­க­சிய வாக்­க­ளிப்­பா­கை­யால் யார் எவருக்கு வாக்­க­ளித்­தார்­கள் என்­பது தெரி­ய­வ­ர­வில்லை என்­பது மட்­டு­மல்ல, 70நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வாக்­க­ளிப்­பின்­போது சபை­யில் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்­க­வில்லை. கூட்டு எதி­ர­ணி­யி­னர், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் மற்­றும் மக்­கள் விடு­தலை முன்­னணி உறுப்­பி­னர்­கள் வாக்­க­ளிப்பு ஆரம்­ப­மா­கிய வேளை­யில் சபை­யை­விட்டு வெளி­யே­றி­யுள்­ள­னர். இது­தான் குழப்­பக்­கா­ ரர்­க­ளி­ ன­தும், கட்­சித்­தா­வல்­கா­ரர்­க­ளி­ன­தும் செயற்­பா­டு­க­ளா­கும்.

இன்­னும் எஞ்­சி­யி­ருக்­கும் 18மாதங்­க­ளி­ளா­வது ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் மைத்­தி­ரி­பா­ல­வின் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் ஒன்­றி­ணைந்து செயற்­பட்டு, அதி­க­மான வௌிநாட்டு முத­லீ­டு­களை ஊக்­கு­வித்து, வேலை­யற்­றி­ருக்­கும் இளை­ஞர்­க­ளுக்­குத் தொழில் வாய்ப்­புக்­களை வழங்கி நாட்டை முன்­னேற்ற வேண்­டும் என்­பதே இந்த நாட்­டு­மக்­க­ளது எதிர்­பார்ப்­பாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close