காக்­கை­தீ­வில் தாம் விட்ட நாய்­களை மாந­கர சபையே பிடித்­துச் செல்­லட்­டும்

நல்­லூர் ஆல­யத்­துக்கு வரும் அடி­யார்­க­ளின் நலன் கருதி யாழ்ப்­பாண மாந­கர சபை­யி­னால் பிடிக்­கப்­பட்டு காக்­கை­தீ­வுப் பகு­தி­யில் விடப்­பட்ட கட்­டாக்­காலி நாய்­கள் மீண்­டும் அங்­கி­ருந்து பிடித்­துச் செல்­லப்­ப­ட­வேண்­டும் என்று தெரி­வித்­துள்­ளது வலி­கா­மம் தென்­மேற்­குப் பிர­தேச சபை. இது தொடர்­பான தீர்­மா­னம் நேற்று இடம்­பெற்ற பிர­தேச சபை அமர்­வில் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.
வலி­கா­மம் தென்­மேற்­குப் பிர­தேச சபை­யின் மாதாந்த சபை அமர்வு தவி­சா­ளர் அ.ஜெப­நே­சன் தலை­மை­யில் சபை மண்­ட­பத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது. சபை உறுப்­பி­னர் திரு­மதி செந்­தினி தரு­ம­சீ­லன் ஒரு தீர்­பி­மான வரைவை முன்­வைத்­தார்.

நல்­லூர் ஆல­யச் சூழ­லில் திரிந்த முப்­ப­துக்­கும் மேற்­பட்ட நாய்­கள் கட்­டாக்­காலி நாய்­கள் யாழ். மாந­கர சபை­யி­ன­ரால் பிடிக்­கப்­பட்டு காக்­கை­தீ­வுப் பகு­தி­யில் விடப்­பட்­டன.

அந்த நாய்­கள் அரு­கி­லுள்ள குடி­ம­னை­க­ளுக்­குள் புகுந்து அங்­குள்ள நாய்­க­ளை­யும் கால்­ந­டை­க­ளை­யும் கண்­டிக்­கின்­றன என்­கிற குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ள­த◌ாக உறுப்­பி­னர் தனது உரை­யில் தெரி­வித்­தார். உண­வுத் தேவைக்­கா­கக் கழி­வு­களை வீதி­யில் இழுத்­துக் கொட்­டு­வ­தால் சுகா­தா­ரப் பிரச்­சி­னை­யும் ஏற்­ப­டு­கின்­றது என்­றும் அவர் குற்­றஞ்­சாட்­டி­னார்.

வீதி­யால் செல்­ப­வர்­க­ளை­யும் இந்த நாய்­கள் துரத்­திச் செல்­கின்­றன .ஆகவே மாந­கர சபை­யி­ன­ரால் கொண்டு வந்து விடப்­பட்ட கட்­டாக்­காலி நாய்­களை மீண்­டும் அவர்­களே பிடித்­துச் செல்­ல­வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார். உறுப்­பி­னர்­க­ளால் ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு இந்த தீர்­மா­னம் சபை­யில் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட் டது.

You might also like