கார்மேல் போய்ஸ்  அரையிறுதிக்குள்

கோண்­டா­வில் கலை­வாணி விளை­யாட்டு கழ­கம் நடத்­தும் துடுப்­பாட்­டத் தொட­ரில் கார்­மேல் போய்ஸ் அணி அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது.

அணிக்கு 8 வீரர்­கள் பங்­கு­பற்­றும் 6 பந்­துப் பரி­மாற்­றங்­கள் கொண்ட இந்­தத் தொடர் கல்­வி­யங்­காடு ஜிபி­எஸ் மைதா­னத்­தில் நடை­பெற்று வரு­கின்­றது. நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற முத­ லா­வது காலி­று­தி­யாட்­டத்­தில் இரு­பாலை விக்றி அணியை எதிர்த்து கார்­மேல்ஸ் போய்ஸ் அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய இரு­பாலை விக்றி அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 6 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் 3 இலக்­கு­களை இழந்து 39 ஓட்­டங் க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக ஜெனித் 19 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார். பந்­து­வீச்­சில் சுதர்­சன் 2 இலக்­கு ­க­ளைக் கைப்­பற்­றி­னார்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத் தா­டிய கார்­மேல்ஸ் போய்ஸ் அணி 3 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் ஓர் இலக்கை மாத்­தி­ரம் இழந்து 40 ஓட்­டங் களைப் பெற்று 7 இலக்­கு­க­ளால் வெற்­றி­பெற்று அரை­யி­று­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close