காலநிலைச் சீர்கேட்டால் வவுனியாவும் பாதிக்கப்பட்டது

93

வவு­னி­யா­வில் பெய்­து­வ­ரும் கன மழை கார­ண­மாக நெடுங்­கேணி பிரதேச் செய­ல­கத்­துக்குட் பட்ட மாறா­யி­லுப்பை பகு­தி­யில் நான்கு வீடு­கள் பகு­தி­ய­ள­வில் சேத­ம­டைந்­துள்­ள­ன.

வெள்­ள­நீர் வீட்­டுக்­குள் உட்­பு­குந்­துள்­ளது. நான்கு குடும்­பங்­களைச் சேர்ந்த 18 பேர் பாதிப்­ப­டைந்­துள்­ள­னர். பாதிக்­கப்­பட்ட வீடு­கள் தற்­கா­லிக கொட்­டில்­க­ளாக காணப்­ப­டு­கின்ற நில­மை­யில், மழை­யி­னால் மேலும் பாதிப்­ப­டைத்­துள்­ளன. வெள்­ளப்­பா­திப்­பு­கள் தொடர்­பாக மதிப்­பீ­டு ­செய்­ய­பட்டு அவர்­க­ளுக்­கான இழப்பீடுகள் வழங்­க­ப்ப­ட­வுள்­ள­தாக வவு­னியா மாவட்ட இடா் முகா­மைத்­துவ பிரி­வின் உத­வி­ப் ப­ணிப்­பா­ளர் என்.சூரி­ய­ராஜா தெரி­வித்­தார்.

வவு­னி­யா­வில் கடந்த சில­நாள்­க­ளாக பர­வ­லாகப் பெய்­து­வ­ரும் மழை­கா­ர­ண­மாக சிறிய குளங்­கள் நிறைந்­துள்ள நிலை­யில் தாழ்­நி­ல­ப் ப­கு­தி­க­ளில் நீர் தேங்­கி­நிற்­கின்­றது.கடந்த இரு­பத்து நான்கு மணி நேரத்தில் வவுனியாவில் 46.5 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதுடன், 48 மணிநேரத்தில் 90.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவு னியா மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

You might also like