கிம் ஜோங் உட­னான சந்­திப்­புத் தொடர்­பில் ட்ரம்ப் நாளை அறி­விப்பு!!

வட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன்­னு­ட­னான சந்­திப்­புத் தொடர்­பில் அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் நாளை அறி­விக்­க­வுள்­ளார். சில­வே­ளை­க­ளில் இன்­றும் இந்த அறி­விப்பு வெளி­வர வாய்ப்­புள்­ளது என்று பன்­னாட்டு ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டன.

கொரி­யத் தீப­கற்­பப் போரால் கொரிய நாடு­கள் இரண்­டா­கப் பிள­வ­டைந்­தன. வட­கொ­ரியா – தென்­கொ­ரியா இடை­யில் கடந்த 1953ஆம் ஆண்­டில் இருந்தே நேரடி மற்­றும் மறை­முக மோதல்­கள் இருந்து வந்­தன.

ஆனால் இந்த வரு­டம் நடை­பெற்ற குளிர்­கால ஒலிம்­பிக் தொட­ரில் வட­கொ­ரியா பங்­கேற்­ற­மையை அடுத்து கொரிய நாடு­கள் தமக்­குள் நட்­புப் பாராட்ட ஆரம்­பித்­துள்­ளன. தொடர்ந்து ஏற்­பட்ட அடுத்­த­டுத்த மாற்­றங்­கள் ஆறு தசாப்த காலப் போரை அப்­ப­டியே புரட்­டிப்­போட்­டுள்­ளன.

வட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன் – தென்­கொ­ரிய அதி­பர் மூன் ஜெ இன் இடை­யி­லான சந்­திப்­பும் அண்­மை­யில் இடம்­பெற்­றது. இதை­ய­டுத்து கிம் ஜோங் உன் – அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் இடை­யி­லான சந்­திப்­பும் விரை­வில் இடம்­பெ­ற­வுள்­ளது.

அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்­குள் இந்­தச் சந்­திப்பு இடம்­பெ­றும் என்று கரு­தப்­ப­டு­கி­றது. எனி­னும் எப்­போது, எங்­கு­வைத்து இந்­தச் சந்­திப்பு இடம்­பெ­றும் என்று எந்த அறி­விப்­பும் வெளி­வ­ர­வில்லை. இந்த நிலை­யில் இது தொடர்­பான அறி­விப்­புக்­களை ட்ரம்ப் நாளை வெளி­யி­ட­வுள்­ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close