கிராமத்துக்குள் புகுந்த யானைக் குட்டி கிணற்றில் வீழ்ந்த பரிதாபம்!!

பாவனையற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து உயிருக்குப் போராடும் யானைக் குட்டியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


வவுனியா வடக்கு கனகராஜன்குளம் பெரியகுளம் பகுதியிலுள்ள பாவனையற்ற கிணற்றில் யானை குட்டி தவறி வீழ்ந்துள்ளது.

இதையடுத்து அருகிலிருந்தவர்களின் உதவியுடன் கிணற்றிலிருந்த பெருமளவு தண்ணீர் வெளியே இறைக்கப்பட்டு ஜே.சி.பி, பாரம் தூக்கியின் உதவியுடன் யானைக் குட்டியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கனகராஜன்குளம் பொஸார், கிளிநொச்சி வனபரிபலனத்திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் யானைக் குட்டியை மீட்க உதவி வருகின்றனர்.

You might also like