கிளிநொச்சியில் கடும் வறட்சி- நீரை சிக்கனமாகப் பயன்படுத்தக் கோரிக்கை!!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது காணப்படும் வறட்சியான காலநிலையால் நீருக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுகின்றது. நாளை முதல் இரு தினங்களுக்கு ஒரு தடவை சுழற்சி முறையில் நீர் வழங்கல் இடம்பெறும். முன்னறிவித்தல் இன்றி நீர் வழங்கல் தடைப்படும் சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.

தேசிய நீர்வழங்கல் அதிகார சபையினர் வேண்டுகோள்
இவ்­வாறு தேசிய நீர்­வ­ழங்­கல் அதி­கார சபை­யின் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி பிராந்­திய முகா­மை­யா­ளர் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக அவர் அனுப்­பி­யுள்ள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டதாவது:

தற்­போது கிளி­நொச்சி மாவட்­டத்­தில் கடும் வறட்சி நில­வு­கின்­றது. நீர் வழங்­கல் வடி­கா­ல­மைப்­புச் சபை­யி­ன­ரின் நீர் பெறப்­ப­டும் வளங்­க­ளில் அதி­க­ளவு வேறு­பா­டு­கள் காணப்­ப­டு­கின்­றன. அந்த நீரைச் சுத்­தி­க­ரிப்­ப­தில் பல சிர­மங்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.
இத­னால் சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட நீருக்­குப் பெரும் பற்­றாக்­குறை நில­வு­கின்­றது. அத­னால் பாவ­னை­யா­ளர்­கள் நீரை வீண் விர­யம் செய்­யாது, சிக்­க­ன­மா­கக் பயன்­ப­டுத்த வேண்­டும் என்று கோரிக்கை விடு­கின்­றோம்.

நாளை முதல் இரு நாள்­க­ளுக்கு ஒது தடவை என்ற சுழற்சி முறை­யில் நீர் வழங்­கல் நடை­பெ­றும். முன்­ன­றி­வித்­தல் இன்றி நீர் வழங்­கல் தடைப்­ப­டக் கூடிய சாத்­தி­ய­மும் உள்­ளது.

பாவ­னை­யா­ளர்­கள் நீரைக் கொதிக்க வைத்­துப் பாவ­னைக்கு உட்­ப­டுத்தவேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கின்­றோம் -– என்­றுள்­ளது.

You might also like